ராபர்ட் கால்டுவெல் பிறப்பு – 7.5.1814

(திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதியவர்) ராபர்ட் கால்டுவெல் 7.5.1814ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார். 1838-இல் சென்னை வந்த ராபர்ட் கால்டுவெல் சென்னையிலேயே தங்கி மூன்றாண்டுகளில் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டார். திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் திருக்குறள், சீவக சிந்தாமணி, நன்னூல் ஆகிய நூல்களைக் கற்றுணர்ந்தார் கால்டுவெல். ‘திருநெல்வேலியின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ எனும் நூலை எழுதினார். கால்டுவெல்லின் பணிகளுள் முதன்மையானதாகப் போற்றப்படுவது, திராவிட மொழிக் குடும்பம் குறித்த ஆய்வுகளே. தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, […]

மேலும்....

பெண்ணினத்தின் பெரும் எதிரி!

நேருவின் காலத்தில் பெண்களுக்குச் சொத்துரிமையைக் கொடுப்பது பற்றிய பேச்சு அடிபட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தின் ஒரு பகுதி அது. அது நிறைவேறவில்லை என்றாலும் அந்தப் பேச்சு ஏடுகளில் வந்திருக்கிறது. அப்போது சங்கராச்சாரியார் காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கிற எசையனூர் எனும் ஊரில் இருக்கிறார். சங்கராச்சாரியார் என்றால் இறந்துபோன அந்தப் பெரியவர் (சந்திரசேகரேந்திரர்). அவர் தாத்தாச்சாரியாரைப் பார்த்து, “லோகமே அழியப்போறது ஓய்! பொம்மநாட்டிகளுக்கெல்லாம் சொத்துக் கொடுக்கப் போறாங்களாம். ஸ்ரீகளுக்கு சொத்துக் கொடுத்தா என்னவாகும்? அவாஅவா அவாளுக்கு இஷ்டப்பட்டவா […]

மேலும்....

அயோத்திதாச பண்டிதர் – மஞ்சை வசந்தன்

1845 ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்த அயோத்திதாசர், தேர்ந்த சிறந்த ஆய்வுநுட்பங் கொண்ட மருத்துவர். தென்னகத்தில் புத்தம் மறுமலர்ச்சியடைய காரணமாய் அமைந்தவர். மனித விரோத ஜாதி, மதம், தீண்டாமை இவற்றிற்கு எதிராய் மிகத் தீவிரமாய்ப் போராடியவர். அவர் நடத்திய போர் அறிவு சார்ந்தது. தனது புலமையினால், ஆய்வு நுட்பத்தினால் உண்மைகளைக் கொண்டு வந்து, எதிரிகளின் சூழ்ச்சியை வீழ்த்தியவர். ஆதிதிராவிடர்கள் தொடக்கத்தில் பவுத்தர்களே என்பதை வரலாற்றுத் தடயங்களோடு உறுதி செய்தவர். […]

மேலும்....

காரல்மார்க்ஸ் பிறப்பு – 5.5.1818

உலக வரலாற்றில் மங்காப்புகழுடன் தலைசிறந்து விளங்குபவர் கார்ல் மார்க்ஸ். 5.5.1818 அன்று ஹெய்ன்ரிச் மார்க்ஸ், ஹென்றியேட்டா பிரஸ்பார்க் ஆகியோர்க்கு மகனாக ஜெர்மனியில் டிரைலர் என்னும் இடத்தில் பிறந்தார். காரல் மார்க்சின் பெற்றோர்கள் ஜெர்மனியில் வழக்குரைஞர்களாகப் பணியாற்றி வந்தனர். காரல் மார்க்ஸுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தபோதிலும் தத்துவமும் வரலாறும் பிடித்திருந்தது. தனது ஆருயிர் நண்பர் ஃபிரடெரிக் ஏங்கல்சுடன் இணைந்து கம்யூனிசக் கொள்கையைப் பிரகடனம் செய்தார். உலகப் பட்டாளி மக்களுக்கு வழிகாட்டும் (மூலதனம்) தத்துவத்தைத் தந்தவர். தலைசிறந்த புரட்சியாளராக, தொழிலாளி […]

மேலும்....

முனைவர் மு. வரதராசனார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனை

‘‘முதுநிலைத் தேர்வுக்காக முயன்று படித்து வந்தேன். தேர்வுக்குக் கட்டணம் செலுத்தப் புறப்பட்ட நேரம் இராகு காலமாக இருந்தது. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்து புறப்படும்போது முடிதிருத்தும் தொழிலாளி எதிரே வந்தார். அப்போது உறவினர் ஒருவர், ‘‘சகுனம் சரியில்லை தம்பி! மேலும் இப்போது இராகு காலம் வேறு. அது கழிந்த பின் புறப்படு’’ என்றார். “எனது முயற்சியில் குறையில்லை என்றால் நான் தேர்ச்சி பெறுவது உறுதி. அப்படி நான் தேர்ச்சி பெறாமல் போனால் […]

மேலும்....