சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் – பிறப்பு 1.6.1888

சுயமரியாதை இயக்கத்தில் அய்யாவின் தொண்டராகத் தன்னைக் காட்டிக் கொள்வதை பெருமிதமாகக் கொண்ட ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தின் செல்வபுரத்தில் 1.6.1888 ஆண்டு பிறந்தார். அவரின் தந்தை தாமரைசெல்வம், தாயார் ரத்தினம் அம்மையார் ஆவர். திருச்சி புனித வளனார் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தார். பன்னீர்செல்வம் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாரிஸ்டர் பட்டம் முடித்து திரும்பியதும் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். தென்னிந்திய நலவுரிமைச் சங்க முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் தம் தீவிர இனவுணர்வுத் தொண்டினால் உயர்ந்திருந்த […]

மேலும்....

முதல் சந்திப்பு லக்னோ சந்திப்பு

1916ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு இருபெரும் சிறப்புகள் உண்டு. அந்த மாநாட்டிலேதான் மதச் சிறுபான்மையினருக்கும் உரிய உரிமைகளை வழங்குவது என்ற ஜனநாயக முடிவை இந்திய தேசிய காங்கிரசும், இந்திய முஸ்லிம்லீக்கும் சேர்ந்து எடுத்தார்கள். அதைத்தான் நாம் இப்போதும் லக்னோ ஒப்பந்தம் (Lucknow Fact) என்று அழைக்கிறோம். அந்த மாநாட்டுக்கு இருக்கிற இன்னொரு சிறப்பு என்னவென்றால் அந்த மாநாட்டிலேதான் முதன்முதலாக காந்தியாரும் நேருவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டார்கள். அது குறித்து ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையிலே […]

மேலும்....

அயோத்திதாச பண்டிதர் – 20.5.1845-5.5.1914

பேராசிரியர் சுப.வீ. 1845ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில், கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்தார் அயோத்திதாச பண்டிதர். சிறந்த ஆய்வு நுட்பங்கொண்ட மருத்துவர். தென்னநாட்டில் புத்தம் மறுமலர்ச்சியடையக் காரணமாய் அமைந்தவர். ஜாதி, மதம், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராய் மிகத் தீவிரமாகப் போராடியவர். ஆதிதிராவிடர்கள் தொடக்கத்தில் பவுத்தர்களே என்பதை வரலாற்றுத் தடயங்களோடு உறுதி செய்தவர். அயல் நாடுகளிலிருந்து வந்தேறிய ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராய் உறுதியுடன் போராடியவர். சென்னை அடையாறு பகுதியில் ‘தியோசபிகல் சொசையிட்டி’யை 1884இல் நிறுவக் காரணமாக அமைந்தவர். […]

மேலும்....

பிள்ளைப் பருவமும் பிற்கால வாழ்வும்!

சில பிள்ளைகள் பதின் பருவத்தில் பெரும்பாலும் விளையாட்டுப் பிள்ளை களாகவே இருப்பார்கள். பொறுப்பற்று இருப்பார்கள். அவர்களைப் பற்றிய கவலை பெற்றோருக்கு இருக்கும். மேலை நாட்டில் ஒரு தாய்க்கு அப்படியொரு கவலை இருந்தது. எப்போது பார்த்தாலும் என் பிள்ளையை உங்கள் மகன் அடித்துவிட்டான். எங்கள் பிள்ளையை அவன் தள்ளிவிட்டுவிட்டான் என்கிற புகர்களோடு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் மற்றவர்களும் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். இந்த பிள்ளை உருப்படவே மாட்டானோ என்கிற கவலை பெற்றோருக்கு இருந்தது. அவன் தன் நண்பன் […]

மேலும்....

ராஜா ராம்மோகன் ராய் பிறப்பு 22.5.1772

இந்திய வரலாற்றில் ராஜா ராம்மோகன் ராய்க்கு என்று ஒரு சிறப்பான இடம் உண்டு. வங்காளத்தில் பர்த்துவான் மாவட்டத்தில், ராதா நகரம் என்னும் ஊரில் 1772ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் இராமகாந்தர் என்பவருக்கும், தாரிணி என்ற அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ராஜா ராம்மோகன்ராய் விரும்பும் இடம் எல்லாம் நடந்தார். வீட்டை விட்டுப் புறப்பட்டபோது அவருக்கு 12 வயதுதான். சிந்தனைத் தெளிவு பெற்ற சிறுவன் என்பதால், தீரத்துடன் நடந்தார். […]

மேலும்....