கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மறைவு 30.8.1957

திராவிடர் இயக்கங்களான நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகங்களால் ஈர்க்கப்பட்டு அதன் கருத்துகளை திரைப்படங்களில் முதன்முதலில் கொண்டு வந்தார். கலைவாணரின் சிறப்பு என்பது ‘திரைப்படத்துறை’யில் அறிவுப் பிரச்சாரம் செய்ததும், அத்துறையில் ஈட்டியதை, வாரி வழங்கியது என்பதாகவும்தான் அமைந்துள்ளது. கலைவாணர் ஒரு தனி மனிதரல்லர்; அவர் ஒரு சகாப்தம்! அவரோடு அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அப்படிப்பட்ட ஒரு சகாப்தம் இனி தோன்றுவது கடினம். என்னுடைய ஆசிரியர் ‘குடி அரசு’ என்று கூறிய கொள்கைக் கோமான்! […]

மேலும்....

கைவல்ய ‘சாமியார்’ (22.8.1877)

மலையாளக் கள்ளிக்கோட்டையில் 22.8.1877 அன்று பிறந்த பொன்னுச்சாமியவர்கள்(கைவல்யம்) திருச்சியில் ஏழாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வி பயின்றாரெனினும் அறிவுக்கடலாக விளங்கினார். தந்தை பெரியார் அவர்கள் தமது இளமைப் பருவத்தில், அவரது கடைக்கு வரும் கணக்கற்ற ‘சாமியார்’களோடும் ‘பாகவதர்’களோடும் தருக்கமும் கிண்டலும் செய்து கொண்டிருந்த நாள்களில் அறிமுகமானவர். பிற்காலத்தில் இயக்கத்தின் விலை மதிக்கவொண்ணா உடைமையாய் கைவல்யம் அவர்கள் திகழ்ந்தார். கைவல்ய சாமியார், அய்யா அவர்களின் சுயமரியாதை இயக்கம் அமைக்கும் பணியில் உற்ற தோழராகத் தோள் கொடுத்தார். ‘குடிஅரசு’ கட்டுரைகளின் வாயிலாகத் […]

மேலும்....

ராஜாஜியின் கைங்கர்யம்

‘ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலேயே இந்தியாவில் உள்ள பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை 1943 ஆகஸ்ட் மாதமே பெற்றுத் தந்தவர் அண்ணல் அம்பேத்கர் என்பதை நாம் அறிவோம். அவர் இன்னுமோர் அரிய செயலை செய்திருந்தார். ஆங்கிலேயே வைசிராயுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த நாட்டின் நிலைமையை விளக்கி, இந்தியாவில் இருக்கிற பட்டியலின மக்களில் சிறந்த மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைக்கவேண்டும் என்றும், அதற்கான செலவை அரசே ஏற்றுகொள்ள வேண்டும் என்றும் கூறினார். அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது, […]

மேலும்....

டாக்டர் ஏ.இராமசாமி மறைவு: 17.7.1976

சர்.ஏ. இராமசாமி (முதலியார்) அவர்கள் நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே (1917) கட்சியில் இருந்தவர். 1918இல் டாக்டர் டி.எம்.நாயர் இங்கிலாந்து சென்று பார்ப்பனரல்லாதார் உரிமைக்கு போராடி மறைந்த நிலையில், கூர்ம வெங்கட் ரெட்டி (நாயுடு) அவர்களுடன் இணைந்து இங்கிலாந்து சென்று நீதி கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி, அதற்கான சான்றுகளை பிரிட்டன் நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தார். 1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணிபுரிந்தார். பிரிட்டன் அரசின் இந்தியத் துறை […]

மேலும்....

இன்சுலினைத் தூண்டும் வெள்ளரி

» உடலில் சேரும் கெட்ட நீரைப் பிரித்தெடுத்து சிறுநீரகம் செய்யும் பணியை செவ்வனே செய்கிறது வெள்ளரிக்காய். வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை தாகம் எடுக்கும்போதெல்லாம் குடித்து வந்தால் விரைவில் பலனை அடையலாம். » வெள்ளரிக்காயை நறுக்கி அதனுடன் மோர் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரகம் சிறப்பாகச் செயல்படும். » வாய் துர்நாற்றம் பிரச்சனை இருந்தால் வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி நன்றாக பற்களில் படுமாறு மென்று சாப்பிட்டால், வாயில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்து பல் ஈறுகளை பலப்படுத்தும். வாய்துர்நாற்றத்தைக் […]

மேலும்....