இயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்!”

அய்யாவின் அடிச்சுவட்டில்… டாக்டர் இராமதாஸ் அறிக்கை! கி.வீரமணி மேலத்தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நாச்சியார் கோவிலில் 28.10.1990 அன்று இரவு தந்தை பெரியார் வெண்கல உருவச் சிலை திறப்பு விழா  நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிலையைத் திறந்து வைத்து  உரையாற்றுகையில், “பார்ப்பனர்கள் பி.ஜே.பி.யை தூக்கிப் பிடிக்கின்றனர். சமூகநீதிக் கொடியை தூக்கிப் பிடித்திருக்கின்ற வி.பி.சிங் அவர்கள் ஒருவேளை முதுகிலே குத்தப்பட்டு ஆட்சியிலே இருந்து அகற்றப்படும் வேளையில், அவர் பிடித்திருக்கின்ற சமூகநீதிக் கொடியை மீண்டும் […]

மேலும்....

பெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்!

சாதனைகள் குறிப்பிட்டவர்களுக்கு  மட்டுமானதல்ல; வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உண்டானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில்  நம்பிக்கை ஒளிவீசி வருகிறார் மாணவி ரோஜா. இவர் பழங்குடி இருளர் சமுதாயத்தின் முதல் முனைவர் பட்டம் பெறப்போகிறவர். திண்டிவனம் அருகே மரூர் இருளர் குடியிருப்பைச் சார்ந்த ரோஜாவின் பெற்றோர் இருவருமே செங்கல்சூளையில் கூலிவேலை செய்பவர்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிஹெச்.டி சேர்ந்திருக்கிறார் ரோஜா. “சின்ன வயசுல வீட்ல ஒரு கல்யாணப் பத்திரிகையில் மாப்பிள்ளை பெயரின் பின்னாடி, `பிஹெச்.டி-ன்னு […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்!

மஞ்சை வசந்தன் 1.11.2019 அன்று வ.உ.சி, பாரதியார் ஆகியோரின் படங்களோடு, காவி உடுப்பு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, கை,  நெற்றியில் பட்டை என திருவள்ளுவரை இந்துச் சாமியாரைப் போலக் காட்டும் படம் ஒன்றையும் சேர்த்து வெளியிட்டது தமிழக பாஜக. நவம்பர் 2 அன்று திருவள்ளுவர் படத்தை மட்டும் தனியாக வெளியிட்டு, திருவள்ளுவர் மதச்சார்பற்றவர் அல்ல, அவர் ஓர் இந்து என்று கூறியுள்ளது. திருவள்ளுவரைக் காவிமயமாக்கும் இந்த முயற்சியைக் கண்டித்து சமூக வலைத்தளத்தில் (ஙியிறி மிஸீsuறீts ஜிலீவீக்ஷீuஸ்ணீறீறீuஸ்ணீக்ஷீ) என்னும் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது

தந்தை பெரியார் நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது திருக்குறள்தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள். உணர்வது மட்டுமல்ல, நன்றாக மனத்தில் பதிய வையுங்கள்! மேலும் திருக்குறள் ஆரிய தர்மத்தை_மனுதர்மத்தை_அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க என்பதற்காகவே எழுதப்பட்ட ஒரு நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை. மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதையே […]

மேலும்....

தலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக!

‘நீட்’ தேர்வால் என்ன நடக்கும்? _ சமூகநீதி குழிவெட்டிப் புதைக்கப்படும் என்றோம். இப்பொழுது அதுதான் நடந்திருக்கிறது. ‘நீட்’ தேர்வால் ஏற்பட்ட இழப்புகள் லட்சம் லட்சமாய் ரூபாய் செலவு செய்து  ‘நீட்’ கோச்சிங்கில்  யாரெல்லாம் சேரவில்லையோ அவர்களில் ஒருவர் கூட கீழ்க்கண்ட ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேரவில்லை. 1. தருமபுரி 2. தூத்துக்குடி 3. கோயம்புத்தூர் 4. திருவண்ணாமலை 5. விழுப்புரம் 6. திருவாரூர் 7. செங்கல்பட்டு. மீதமிருக்கிற 16 அரசு மருத்துவக் கல்லூரிகளின் […]

மேலும்....