கவர் ஸ்டோரி : பெரியார் நூலை மோடி படிக்க வேண்டும்! ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தை ஆளக்கூடாது!

இராகுல் காந்தியின் எழுச்சியுரை! மஞ்சை வசந்தன் 12.04.2019 அன்று சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இராகுல்காந்தி பேசிய பேச்சுகள், அவரது கொள்கைத் தெளிவை, சமூக நீதியின்பால் கொண்ட பிடிப்பை, ஏழை எளிய மக்களின் மேம்பாட்டில் கொண்டுள்ள அக்கறையை, அவருக்குள்ள வேடமில்லா உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதாய் அமைந்தன. இந்திய வரலாற்றில் இடம் பெறும் பதிவுகள் அது மட்டுமன்றி, அவர் அப்பரப்புரைகளில் பேசிய பேச்சுகள் இந்திய வரலாற்றில் […]

மேலும்....

புரட்சிக்கவிஞர் பற்றி புரட்சித் தந்தை

ஒரு சிலர் பகுத்தறிவைப் பற்றி பாடி இருக்கிறார்கள். என்றாலும் அதோடு மூடநம்பிக்கைக் கருத்துக்களும் கலந்து இருக்கின்றன. அவர்கள் வீட்டில் இருந்து சொன்னார்களே தவிர வெளியில் வந்து தொண்டு செய்யவில்லை. இந்நாட்டின் பாரதிதாசனைப் போன்றவர்களை ஏன் பாராட்டுகிறோமென்றால் துணிந்து வெளியே வந்து கருத்துக்களை எடுத்துரைத்தார். நேற்று நாம் இராமனையும் கந்தனையும் செருப்பாலடி என்று சொன்னோம். 40 வருடங்களுக்கு முன்பே அவர் சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்து பிளந்தெறிய வேண்டுமென்று பாடி இருக்கிறார். செருப்பாலடித்தால் கடவுள் உருவம் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : முத்தமிழரங்கம் ஒத்திகையில் பாராட்டுரை

தந்தை பெரியார் “அன்புத் தோழர் பாரதிதாசன் அவர்களே! மற்றும் நடிகையர், நடிகர், பண்டிதர், ஆசிரியர், சொந்தக்காரர் அவர்களே!’’ இன்று உங்கள் மத்தியில் இருக்கவும், உங்கள் சங்கத்தின் கருத்துகளையும், நோக்கங்களையும், வேலை முறைகளையும் உணரவும் வாய்ப்பு கிடைத்தற்கு நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது பாடப்பட்ட பாட்டுகளும் அவற்றிற்கு நடித்த நடிப்புகளும் எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியும் திருப்தியும் அளித்தன. இவை எனது நோக்கத்துக்கும் எதிர்பார்த் திருப்பவற்றிற்கும் பொருத்தமானதாக இருக்கின்றன. நீங்கள் செய்திருக்கும் இந்த மாதிரி ஏற்பாடு உண்மைத் தமிழர்களால் மிகவும் […]

மேலும்....

பதிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்!

வை.கலையரசன் உலகில் நடைபெற்றுள்ள அரசியல், சமுகப் புரட்சிகள் அனைத்தும் புத்தகங்களின் தாக்கங்களால் ஏற்பட்டவையாகும். புத்தகங்களே மனிதனின் சிந்தனையை கூர்மைப்படுத்தும் அறிவாயுதங்கள். மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதலே தமது கருத்தாக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டான். இத்தகைய சிறப்புப் பண்பைதான் உயிரியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்கள் மீம்கள் என்று குறிப்பிடுகிறார். மனிதனின் இன்றைய நாகரீகம், அரசியல், அறிவியல் வளர்ச்சிக்கு இந்த மீம்களே காரணம். குகைகளில், கற்களில், ஓலையில் தம் சிந்தனைகளை பதிவு செய்து […]

மேலும்....

தலையங்கம் : இரட்டை வேடம் அம்பலம்!

  ‘நீட்’ தேர்வைத் திணிப்பது என்பது சமுக நீதியை ஒழிப்பதற்காகவே! குறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள், சிறு பான்மையினருக்குத் தாராளமாக, ஏராளமாகக் கிடைக்கும் வகையில் மானமிகு தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, 30 மாவட்டங்களில், 29 அரசு மருத்துவக் கல்லூரிகளை (சகல வசதிகளுடன்) மாவட்டந்தோறும் ஏற்படுத்தி, கிராமத்து ஆண், பெண் பிள்ளைகள் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தினார். நுழைவுத் தேர்வை ரத்து செய்த போது,  முறைப்படி […]

மேலும்....