பெரியாருக்கு சங்கராச்சாரியார் எழுதிய கடிதம்

அய்யாவின் அடிச்சுவட்டில்… 117 ஆம் தொடர்

பெரியாருக்கு சங்கராச்சாரியார் எழுதிய கடிதம்

(சூளுரை நாள் கூட்டங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு தொடர்கிறது)

சிருங்கேரி சங்கராச்சாரியார் என்பவர் தந்தை பெரியார் அவர்களுக்கு, இந்த இயக்கம் தொடங்கிய உடனே 1930ஆம் ஆண்டு ஒரு கடிதம் எழுதுகின்றார், தந்தை பெரியார் அவர்களின் தொண்டு எப்படிப்பட்டது என்று அந்த எதிரி சொல்லுகின்றார்? அதைத்தான் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். நாங்கள் சொல்லுவது அல்ல. நமது இயக்கத்தில் பொது ஒழுக்கம், நாணயம், மானாபிமானத்தைப் பற்றிக் கவலைப்படாது பொதுத் தொண்டாற்றும் நிலை இருக்கின்றது என்றால் எப்படி அது வாழையடி வாழையாக தலைவரிடம் இருந்து தொண்டரிடம் இருந்து அது வந்துகொண்டு இருக்கின்றது; அது எதிர்காலத்திலும் பொதுச்சொத்தாக இருக்கும் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன்.

மேலும்....

போலி அறிவியல்

சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மய்யமா?

– மருத்துவர் ஜானகிராமன்

 

1. போலி அறிவியலுக்கு நீங்கள் பலியனவரா?

இந்த மாதிரியான கோவில்களை இப்ப உள்ள அறிவியலால் கட்ட முடியுமா? என்று அவ்வப்போது சிலாகிக்கும் நமது மத அடிப்படைவாதிகள், இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் ‘மகா சக்தி’ பெற்று சுற்றி உள்ள ஊர்களில் ‘இடி விழாமல்’ தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் ‘இடி தாங்கி’யாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த ‘அறிவியல் பூர்வமான’ அமைப்பை அந்தக் காலத்திலேயே நம்ம முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் உங்களிடம் சொல்லி இருக்கக்கூடும்.

மேலும்....

ஆடுகளின் மீது அன்பைப் பொழியும்… …மோடி!

ஆடுகளின் மீது அன்பைப் பொழியும்… …மோடி!

– சிற்பா அம்பேட்கர்

மோடி என்னும் வாய்ச்சொல் வீரரின் சமீபத்திய கவர்ச்சிமிகு  அறிவிப்புதான் இந்த சுவச்ச பாரத். அதை தொடங்கின இடம் எது தெரியுமா?  தில்லியின் வால்மிகி பஸ்தி என்னும் வால்மிகி ஜாதியைச் சார்ந்த தீண்டப்படாத துப்புரவுத் தொழிலாளிகள் வசிக்கும் பகுதி.  சுத்தம் என்பது துப்புரவுத் தொழிலாளிகளின் வேலை மட்டுமல்ல, நம்முடைய கடமையும் கூட  என்று வாய்ச்சவடால் அடித்தபின்பே வால்மீகி பஸ்தியை தேர்ந்தெடுத்திருக்கிறார் மோடி.  உண்மையிலேயே துப்புரவுத் தொழிலாளிகள் மீது இவருக்கு அக்கறை இருக்கிறதா? அவர்களின் இழிநிலைக்குக் காரணம் – தான் போற்றும் இந்து சனாதன மதம்  என்ற புரிதல் இருக்கிறதா? அந்த இழிநிலைக்குக் காரணமான ஜாதியமைப்புக்கெதிராக ஒரு துரும்பைக் கிள்ளிப் போடுவாரா  என்பதை அலசிப்பார்க்க கீழுள்ள பத்திகளை கவனமாக வாசியுங்கள்.

மேலும்....

சூத்திரஜாதி இழிவு சுத்தத்தால் நீங்காது

– தந்தை பெரியார்

தந்தை பெரியார்

இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய திராவிடர்களின் இழிவுகளையும் முன்னேற்றத்தையும் அடியோடு ஒழித்து அவர்களை மற்ற நாட்டு மக்களைப் போலும் இங்குள்ள திராவிடரல்லாத மக்களைப் போன்றும் சிறப்பாக நல்வாழ்வாக மனிதத் தன்மையுடன் நம்பும்படிச் செய்வதுதான் திராவிடர் சமூகத்தின் முக்கியமான நோக்கமும் வேலையுமாகும்.

 

மேலும்....

மூளை to மூளை தகவல் பரிமாற்றத்தில் புதிய புரட்சி!

– செமல்விஸ்

ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் (நபர் 1) நினைப்பதை அடுத்தவர் (நபர் 2) புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும்

1. நபர் 1 சிந்திக்க வேண்டும் 2. நபர் 1 சைகை காட்ட வேண்டும்

3.    நபர் 1 காட்டும் சைகைகளை நபர் 2 பார்க்க வேண்டும்

4. நபர் 2 பார்ப்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சைகையுடன் சேர்ந்து பேச்சும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியது. மனித குலம் இந்த நிலைக்கு முன்னேறியபோது  ஒருவர் (நபர் 1) நினைப்பதை அடுத்தவர் (நபர் 2) புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் 1. நபர் 1 சிந்திக்க வேண்டும் 2. நபர் 1 பேச வேண்டும்

மேலும்....