இறையருள் இல்லை!

தாமஸ் ஆல்வா எடிசனின் யூகம் எப்போதும் சரியாகவே இருக்கும். அவருடன் பணிபுரிந்த ஒரு நண்பர் தாமஸின் யூகம் பற்றி கூறினார். யூகிப்பதில் எடிசனுக்கு நிகர் எடிசன்தான்! நாங்கள் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த பலமுறை முயற்சி செய்து தோற்றிருப்போம். அதை எடிசனிடம் கொடுத்தால் நாங்கள் தொடர்ந்த அதே வழியில்தான் அவரும் செல்வார். இதைத்தானே நாமும் செய்தோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, அதில் ஒரு மாற்றத்தைச் செய்வார். அந்தச் சோதனை வெற்றிபெற்றுவிடும். அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்று எப்படித் தோன்றியது […]

மேலும்....

விளக்குகள்

காளிக்கும் மாரிக்கும்காலைக்கும் மாலைக்கும்நெனைச்சது நடக்கனுமுன்னுநெய்விளக்கு ஏத்திவச்சேன்,மனக்குமுறல்மறையனுமுன்னுமாவிளக்கும்ஏத்திவச்சேன்,பொய்விளக்காபோனதினுபுலம்பிகிட்டே நிக்கி,என் புகைப்படத்தின்முன் எரியும்குத்துவிளக்கு! – ஆல. தமிழ்ப்பித்தன்புனல்வேலி

மேலும்....

களவாடப்பட்ட தமிழிசையே கர்நாடக சங்கீதம்!! – (2)

  பண்ணிசைப் பாடல்கள் பண்டைய தமிழிசைப்பண் இன்று இராகம் எனப் பெயர் மாற்றப்பட்டதின் அடிப்படையில் அமைந்த சில பாடல்களை ஒப்பீட்டு முறையில் இப்பொழுது பார்ப்போமே! மாதவிப் பொன்மயிலாள்! தமிழிசையில் அன்று படுமலைப்பாலைப் பண் இன்று கர்நாடக சங்கீதத்தில் கரகரப்பிரியா என்னும் இராகமாகப் பெயர் மாறியது. இந்த இராகத்தில், தியாகய்யரின் சக்கணி ராஜா… என்று தொடங்கும் பாடலும், ராமா நீ சமானமெவருரா? என்று தொடங்கும் கிருதி (கீர்த்தனை)யும் ஈடும் எடுப்பும் இல்லாதவை என்று கர்நாடக சங்கீதக்காரர் கதைப்பர். ஆனால், […]

மேலும்....

எம்.ஜி.ஆர்.கொண்டாடிய திருநாள் எது?

தாய்வீட்டில்தான் பிரசித்தி பெற்ற எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பொங்கல் விழா நடைபெறும். பிறப்பால் மலையாளி என்று சொல்லப்பட்டாலும் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை கொண்டாடிய பண்டிகைகள் பொங்கலும், தமிழ்ப்புத்தாண்டும் மட்டும்தான். பொங்கல் விழாவின் போது எம்.ஜி.ஆருடைய ஸ்டண்ட் கோஷ்டியினர் நாடகம் போடுவார்கள். எம்.ஜி.ஆரது படங்களில் கொடூரமான வில்லன்களாக தோன்றும் அவர்கள் அன்று நல்ல கேரக்டர்களில் உருக வைப்பார்கள். குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடக்கும். அன்று தாய்வீட்டுக்கு வருகை தருபவர்களுக்கு கைக்கு கிடைத்ததை எல்லாம் கொடுத்து மகிழ்வார் எம்.ஜி.ஆர். —      யுவகிருஷ்ணா

மேலும்....

மகளிர்க்கு மட்டுமல்ல . . .!

தெருவில் தன் வயசினையொத்த சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பெண்குழந்தை திடீரென தன் உடல் வெப்பமடைந்து லேசான வலியுடன், விளையாடுவதை நிறுத்தினாள். பக்கத்திலிருந்த பையன் உன் பாவாடையில் இரத்தம் என்று காட்டினான். வீட்டின் வெளியே குப்பையை கொட்ட வந்த அம்மா இதை கவனித்தாள். தன் மகளை தரதரவென்று வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள். வீடு மகிழ்ச்சியும், துக்கமும் ஆக இருந்து கொண்டிருந்தது.

மேலும்....