கொலைவெறி கொண்ட மூடநம்பிக்கை

இனி அவரால் பேச முடியாது. காலையில் நடைப்பயிற்சி சென்ற அவர், சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டார். ஆனால், அவருக்காகப் பலர் பேசுகிறார்கள். அவர் எதைப் பற்றிப் பேசினாரோ அதைச் சட்டமாக்குங்கள் என்று உரக்கப் பேசுகிறார்கள். அவர்..  நரேந்திர தபோல்கர். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது பகுத்தறிவுவாதி. சதாரா மாவட்டத்தில் சோஷலிச இயக்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். சர்வதேச அளவிலான கபடிப் போட்டிகளில் பங்கேற்றவர். மருத்துவம் பயின்று டாக்டரானவர். உடல் நோயைவிட தீவிரமாகச் சிகிச்சையளிக்கப்பட வேண்டியது சமூகத்தில் பரவியுள்ள நோய்தான் […]

மேலும்....

புலித்தோல் போர்வை – அறிஞர் அண்ணா

இந்து மதத்திலே உள்ள இழுக்குகளைப் போக்கத்தான் வேண்டும் -_- அழுக்கு மூட்டைகளை ஒழிக்கத்தான் வேண்டும். ஜாதி பேதங்களைப் போக்கத்தான் வேண்டும் _- பழைய ஏற்பாடுகளை ஒழிக்கத்தான் வேண்டும். – இந்து மதத்திலே உள்ள கறைகளைப் போக்க வேண்டுமேயல்லாமல், அதையே ஒழிப்பது, அல்லது, நான் இந்து அன்று என்று கூறுவது கூடாது என்று சிலர் போவதுண்டு.

மேலும்....

சங்க இலக்கியத்தில் சிந்து சமவெளித் தொடர்பு

– ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்

https://unmai.in/new/images/magazine/2013/jun/16-30/14.jpg

எழுதுபவன் மதுரைக் கவிஞன். அவன் அங்கு ஒட்டகத்தைப் பார்த்தான்.

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளை பைஞ்சுனை பருகி, அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்,
வடதிசை அதுவே! வான்தோய் இமயம்

மேலும்....

’சோ’த்தபய ராம’பக்‌ஷே துக்ளக்கின் துதிபாடும் பயணம் – 5

ஊமப் பொம்மையாதான் இங்க வாழறம் உசுரு மட்டும்தான் மிச்சமிருக்கு!

மகா.தமிழ்ப் பிரபாகரன்

சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமானால், ஒரு முறை அடிமையாய் இருந்து பார் என்றார் இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டியெழுப்பிய நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். இந்தியாவும் இவர் கூறிய கருத்துப்படியேதான் சுதந்திரத்தை அடைந்தது. ஆனால், அடிப்படையிலேயே இலங்கை அப்படி இல்லை. சுதந்திரப் போராட்டமே மதக்கலவரங்களாகவும் இனக் குரூரங்களை உடையதாகவுமே உருவெடுத்தது. அப்படியான அதிகாரம் படைத்த சிங்கள இனவாதிகளும் புத்த (சிங்கள)மதவாதிகளும் இலங்கை சிங்களர்களுக்கே சொந்தம் என்ற நிலையை அன்றைய ஆங்கிலேயர்களிடம் ஏற்படுத்தினர். அதன் விளைவுதான் தமிழர்களுக்கு உரிமையில் சமபங்கு என்ற விதத்தில் ஒன்றுபட்ட இலங்கையாக இனவாத தேசம் வடிவம் பெற்றது.

மேலும்....

நாத்திகம்

உலகத்திலேயே நாஸ்திகம் என்று சொல்லப்படும் வார்த்தையானது அநேகமாக பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்படக் கூடியதாக இருந்து வருகின்றது. காரணம் என்னவென்று பார்ப்போமானால் அவ்வார்த்தையில் கடவுள் என்பது இல்லை என்கின்ற பொருள் அடங்கியிருப்பதாகக் கொள்வதேயாகும். மக்கள் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதைப் பற்றி மாத்திரமே ஆத்திரப்படவும், வெறுப்புக் கொள்ளவும் புரோகிதர்கள், பாதிரிகள், மவுல்விகள், பண்டிதர்கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டு விட்டதே தவிர, கடவுள் என்பதைப் பற்றிய விளக்கம் யாவருக்கும் தெளிவாக்கப்படாமல் இருப்பதோடு அது (கடவுள் என்பது) மனதிற்கும், புத்திக்கும் எட்டாதது என்பதாகவும், அப்படிப்பட்ட ஒன்றை நம்பித்தானாக வேண்டும் என்றும் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு விட்டது. இப்படியிருந்தபோதிலும் என்றைய தினம் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து உண்டு என்று கற்பிக்கப்பட்டதோ அன்று முதலே கடவுள் இல்லை என்கின்ற வாதமும் ஏற்பட்டு

மேலும்....