மாட்டிறைச்சியும் – மத அரசியலும்!

நம் நாட்டில் உண்ணும் உணவையும்கூட மதம் நிர்ணயிக்கிறது! மதம் பிடிப்பது எவ்வளவு ஆபத்து என்பது இதிலிருந்தே தெரியவில்லையா? ஹிந்து மதம் என்று இப்போது அழைக்கப்படும் சனாதன ஆரிய வேத மதத்தினை இப்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க. (இதுபோன்ற கொள்கைப் பிரச்சினைகளை முன்வைத்துத் தேர்தலில் அவர்கள் போட்டியிடவில்லை; மாறாக, மாற்றம், வளர்ச்சி என்ற சாக்குப் போக்குக் காட்டினர். வாக்காளர்களும் ஏமாந்தனர்) இப்போது இந்துத்துவாவைப் பரப்பி – வெகுவிரைவில் இந்தியாவை ஹிந்து நாடாக்க மும்முரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்! சமஸ்கிருத […]

மேலும்....

ஆடைச் சுதந்திரம் என்பது என்ன? – சிகரம்

எனது முகநூலில் ஆடைச் சுதந்திரம் பற்றிக் கருத்து எழுதியிருந்தேன். பலரும் பாராட்டி வரவேற்ற நிலையில், ஒருசில பெரியார் தொண்டர்களே, பெரியார் தொண்டரான நீங்கள் இப்படிச் சொல்ல-லாமா? என்று வினா எழுப்பியுள்ளனர்.

எனவே, விரிவான ஒரு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

மேலும்....

கொழுப்பு குறைய பூண்டின் பங்கு

பூண்டில் பல சத்துப்பொருட்கள் இருந்தாலும், அலிஸின்(Allicin)என்று சொல்லக்கூடிய ஒரு முக்கியமான பொருள் இருக்கிறது. இது பாக்டீரியாக் கிருமி எதிர்ப்பு, வைரஸ் கிருமி எதிர்ப்பு. பூஞ்சை நோய்க் கிருமி எதிர்ப்பு சக்திகளைக் கொண்டதாகும்.

உடலிலுள்ள நச்சுப் பொருட்களை அழித்து வெளியேற்றும் சக்தியும் இந்த அலிஸினுக்கு உண்டு. பூண்டில் இயற்கையாகவே உள்ள அஜோன்(Ajoene) என்கிற ரசாயனப் பொருள், உடலில் ஏற்படும் சில தோல் நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது.

மேலும்....

இளைஞர்களே இதயத்தைக் காக்க எளிய வழிகள்! கட்டாயம் பின்பற்றுங்கள்!

(ஆண்-பெண் இருவருக்கும்)

– நேயன்

இது உங்களுக்காக மட்டுமல்ல. உங்களை நம்பியுள்ள உங்கள் குடும்பத்தாருக்காக, உங்கள் மனைவிக்காக அல்லது கணவனுக்காக; உங்கள் பிள்ளைகளுக்காக.

இக்காலத்தில் 30 வயதிலே மாரடைப்பு வந்து இறப்பு நிகழும்போது இதில் எச்சரிக்கை கட்டாயம் வேண்டும்.

மேலும்....