இந்த சாமியாருக தொல்லை தாங்க முடியலப்பா!

இவ்விடம் அரசியல் பேசலாம் இந்த சாமியாருக தொல்லை தாங்க முடியலப்பா! சந்தானத்தின் சலூனுக்குள் தோழர் மகேந்திரன் நுழைந்ததுமே தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தோழர் என்று வரவேற்றார். உங்களுக்கும் வாழ்த்துகள் தோழர்! இந்தப் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குப் போகலையா தோழர்? என சந்தானம் கேட்க, எங்க ஊருக்குப் போக? பொங்கல் விடுமுறையைக் கணக்குப் பண்ணி பத்தே நிமிடத்துல அத்தனை ரயில் டிக்கெட்டுகளையும் பதிவு பண்ணிடுறாங்க. குழந்தை குட்டியோட போற நான், பேருந்தை நம்பினால் சீரழிய வேண்டியதுதான்! அதனால் தமிழ்ப் […]

மேலும்....

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்

நூற்றாண்டு

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்
(28.05.1914-09.06.1981)

பண்ணாராய்ச்சி வித்தகர் எனவும் ஏழிசைத் தலைமகன் எனவும் திருமுறைச் செல்வர் எனவும் போற்றப்பட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். தமிழிசை உலகின் மிகச் சிறந்த பணிகளைச் செய்துள்ள இவரை உலகத் தமிழர்கள் தங்கள் உள்ளங்களில் போற்றி மதிக்கும் பெருமைக்குரியவர்.

மேலும்....

கிணற்றுத் தவளைகள்

சிறப்புச் சிறுகதை – 2 கிணற்றுத் தவளைகள் – யுவகிருஷ்ணா காலைப்பொழுது விடிய இரண்டு நாழிகை இருக்கும்போது லாந்தாரோடு ஸ்வாமி தெரிசனத்துக்காக கிளம்பினான் கிருஷ்ணமூர்த்தி. தலையில் வெள்ளைப் பாகை. நெற்றியில் ஸ்ரீசூர்ணம். முழந்தாள் வரை நீண்ட வடநாட்டுப்பாணி நாகரிக உடுப்பு. மகா சப்தமெழுப்பிய பாதக் குறடு. அப்பாவின் காசு இவன் அலங்காரத்துக்காகவே தண்ணீரால் செலவாய் கொண்டிருந்தது. தெருமுனையில் ஸ்நேகிதன் நாராயணனும் இணைந்து கொண்டான். சில்வண்டுகளின் ரீங்காரம் தவிர்த்த ஸப்தம் ஏதுமில்லா ஏகாந்த விடிகாலை. நெஜமாவே பிரேமிக்கிறீயா அவளை […]

மேலும்....

மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் – 4

மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் – 4   – அறிவழகன் கைவல்யம் இந்தோ – ஆரிய மொழிக்குடும்பம் மற்றும் திராவிட மொழிக் குடும்ப வகைகளில் காணப்படுகிற  மொழிகளையும், மொழியினங்களையும் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளும் போதுதான்  மனித இனக்குழு வரலாறு குறித்த தெளிவான ஒரு புரிதலுக்கு நம்மால் வர இயலும். சுருக்கமாக இந்த மொழிக் குடும்பங்களின் கிளைகளைப் பற்றி அறிவதற்கு முன்னதாக ஒரு மிக முக்கியமான உண்மையை நாம் தெரிந்துகொள்ள  வேண்டியிருக்கிறது. போலி ஆரியக் கோட்பாட்டின்  கொடியை […]

மேலும்....

குறுஞ்செய்தி

பிரம்மாவின் ஒரு தினத்தில் ஒருமுறை அதாவது நமது புராணம் என்றால் புருடா என்று பொருள். 860,00,00,000 (860 கோடி) ஆண்டு-களுக்கு ஒரு முறை எந்த நோக்கத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறாரோ அந்த நோக்கத்திற்குச் சிறைப்பட்ட ஜீவாத்மாவை வழி நடத்துவதற்காக பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே லட்சியமாகும்.- இந்தச் செய்தி, பகவத் கீதை உண்மையுருவில் என்று பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : […]

மேலும்....