மனிதனை மனிதனாக்க 95 ஆண்டுகள் உழைத்த தலைவர்

அய்யாவின் அடிச்சுவட்டில் -140 மனிதனை மனிதனாக்க 95 ஆண்டுகள் உழைத்த தலைவர் மணமகள் தந்தையும், சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமாகிய பொத்தனூர் க. சண்முகம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவர் தன் உரையில் குறிப்பிட்டதாவது: எனது மூத்த மகளுடைய திருமணம் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. அய்யா _ அம்மா ஆகியோர் இல்லாத நிலையிலும், அவர்கள் இருவருடைய பெயராலும் அமைந்திருக்கிற இந்த மன்றத்தில் திருமணம் நடைபெறுவது கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம். அய்யா, அம்மா […]

மேலும்....

தனிமை தரும் மன உணர்வே பேய்த்தோற்றம் – க.அருள்மொழி

ஆய்வாளர்கள் சொல்வது என்ன? உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள், மனித இயல் ஆய்வாளர்கள் ஆகியோர், மைக்கேல் ஷெர்மெர் (Michael Shermer) என்பவர் எழுதிய, மக்கள் ஏன் இயற்கைக்குப் புறம்பானவற்றை நம்புகிறார்கள்? என்ற நூலின் அடிப்படையில் பல கருத்துகளைச் சொல்லி-யிருக்கிறார்கள். மைக்கேல் ஷெர்மெர், இயற்கையைக் கடந்த, தெய்வீகமான, விஷயங்களில் நம்பிக்கை-யில்லாதவர். அவர், மரபுவழி செயல்களை உளவியல் கண்ணோட்டத்தில், விளக்கியுள்ளார். நிலையற்ற சூழ்நிலைகளால், வாழ்க்கை அச்சுறுத்தலான நிலைக்குள்ளாவதால், மூடநம்பிக்கைகளும்  குழப்பங்களும் மக்களுக்கு ஏற்படுகின்றது. மறுபிறவி நம்பிக்கைகளோ, சொர்க்கலோகம் பற்றிய நம்பிக்கையோ அவர்களுக்கு ஒருவித […]

மேலும்....

பார்ப்பனர்கள் மருத்துவம், பொறியியல் போன்றவை படிக்கலாமா? -காந்தியார்

காசி இந்து சர்வகலாசாலையில் பார்ப்பனர்களான சாஸ்திரிகளும் சர்மாக்களும் மட்டுமே படித்துக் கொண்டிருந்தனர். நாடு விடுதலை அடைந்தவுடன் தகுதி திறமை உள்ள அனைவரும் படிக்கலாம் என்று தீர்மானித்தனர் பல்கலைக்கழக நிர்வாகிகள். பார்ப்பனர்கள் எதிர்த்தனர். உள்துறை அமைச்சர் பட்டேலிடம் தூது சென்றனர். அவர் நேருவைப் போய் பாருங்கள் என்றார். நேரு அவர்களை சந்திக்கவே மறுத்துவிட்டார். நாடும், நாட்டினை ஆளவந்தவர்களும், காந்திக்குக் கட்டுபட்டவர்களே என்று காந்தியிடம் சென்று தங்கள் குறைபாட்டினை தெரிவித்தனர். வந்தவர்களைப் பார்த்த காந்தியார் என்ன கூட்டமாக வந்திருக்கிறீர்கள்; வந்த நோக்கமென்ன? என்றார்.

மேலும்....

விளம்பரமில்லா வியக்கத்தக்க பெரியார் தொண்டர்கள்

சென்னை இராவணன் – தாராசுரம் என்.எஸ்.வாசன் – மதுரை பி.எஸ்.செல்வா, கலைத்தூதன் – மதுரை பொன்னம்மாள் சேதுராமன் – கி.வீரமணி கழகக் கொள்கைப் பிரச்சாரப் பணிகளில் இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி செய்து இயக்கத் தொண்டாற்றிய செம்மல்களின் பட்டியல் ஒரு நீண்ட பட்டியல் ஆகும். திராவிடர் கழகப் பிரச்சாரத்தில் முதலில் இசைக் கச்சேரி என்று இல்லாமல், நல்ல குரல் வளம் உள்ளவர்கள் பாடுவாகள். கூட்டம் சேருவதற்கே இந்த இசை இன்பம் மக்களை ஈர்க்கும். அது தற்போது பெரிதும் […]

மேலும்....

பொதுநலவழக்கு

பொதுநலவழக்கு, நாட்டுக் குடிமக்கள் ஒரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்ற வழக்கைக் குறிப்பிடுகிறது. பொதுமக்களின் அமைதியான மகிழ்வான வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் மாசு (Air Polution. Water Contamination, Noise Polution) பயங்கரவாதம் (Terrorism) சாலை பாதுகாப்பு. கட்டிட அமைப்பினால் ஏற்படும். அபாயங்கள் என்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒருவரால் / பலரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குதான் பொதுநல வழக்கு. பொதுநல வழக்கு தொடர்பான விளக்கம் சட்ட விதிகளிலோ அல்லது ஷரத்துக்களிலோ பதிவு செய்யப்படவில்லை. நாட்டுப் […]

மேலும்....