- தந்தை பெரியார்

கும்பகோணத்தில் மகாமக உற்சவம் நடக்கப் போகிறது. அதற்கு திராவிட மக்களை வரும்படியாக கும்பகோணம் பார்ப்பனர்களால் அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்த-வண்ணமாக விளம்பரங்கள் காணப்படுகின்றன.

பார்ப்பனப் பத்திரிகைகள் மாமாங்கத்தைப் பற்றி பிரமாதப்படுத்தி மக்களை அங்கு சேர்ப்பிக்க, தள்ளிவிட முயற்சிக்கின்றன.