நம்மைப் பொறுத்தவரை தனி மனித முயற்சியைவிட பெரும் ஆபத்து வேறில்லை. ஒற்றுமை இல்லாத பல லட்சம் மக்களால் செய்யப்படும் காரியங்களைவிட, தனியொரு அறிவாளி ஆற்றும் காரியம் நமக்குப் பெரும் தொல்லைகளை விளைவிக்கும். அதன் பொருட்டு, கோயிம்களின் கல்வித்திட்டத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நமக்கு எதிரான நிலையில் யாரேனும் ஒரு திட்டத்தைத் தொடங்க நினைத்தாலும், அதைச் செயலாற்றுவதற்கான திறன் இல்லாத அளவுக்கே அவன் கற்கும் கல்வி அவனைத் தயார் செய்ய வேண்டும். செயலாற்றுவதற்குரிய வழி தெரியாமல், அந்தக் காரியத்திலிருந்து ஆரம்பக் கட்டத்திலேயே அவன் பின்வாங்கிவிட வேண்டும்.
ஒருவருடைய செயல் சுதந்திரத்தை, மற்றொருவரின் செயல் சுதந்திரத்தோடு மோதவிடும்போது, அது இருவரின் பலத்தையும் செயல் வீரியத்தையும் குறைக்கும். சமூகத்தில் தொடரும் அத்தகையதொரு மோதலால், தர்மங்கள் சீர்குலைந்து, தோல்விகளும் அவநம்பிக்கைகளும் அதிகரிக்கும். இத்தகைய வழிமுறைகள் மூலம் அவர்களை நாம் வீழ்த்துவோம். அதற்கு மேல் வேறு வழியே கிடையாது என்ற நிலைக்கு கோயிம்கள் தள்ளப்பட்டு, சர்வ உலகையும் ஆட்சி புரியக்கூடிய அதிகாரத்தை நம்மிடம் கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். பெரும் போர்களின்றி, அகிம்சையான முறையில் அனைத்துத் தேசங்களின் அதிகாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைய முடிவதோடு, உலக வல்லாட்சியையும் நாம் நிறுவ முடியும்.
நமக்குத் தேவையானது என்னவென்றால், இந்தத் தொழில்துறை மூலமாக, செல்வ வளங்கள் நிலத்திலிருந்து உறிஞ்சி எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்க வேண்டும். அதே சமயம், பங்குச்சந்தை சூதாட்டம் மூலம் அந்தப் பொருளாதாரங்கள் அனைத்தும் நம் மக்களுக்கு மாற்றப்பட வேண்டும். இதன் வாயிலாக, நமக்காகக் கூலி வேலை செய்யும் வர்க்கங்களாக கோயிம்கள் யாவரும் மாற்றப்படுவார்கள். மற்ற காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் உயிர் பிழைக்கும் எண்ணத்திலாவது நம் முன் அவர்கள் மண்டியிட்டுத்தான் ஆகவேண்டும்.
கோயிம்களின் தொழில்துறையை முற்றிலுமாக அழிக்கவும் பங்குச் சந்தையை ஊக்கப்படுத்தவும் ஏற்கெனவே ஆடம்பர வாழ்க்கை மீதான வெறியை அவர்களுக்கு உண்டாக்கியிருக்கிறோம். இனியும் அதைத் தொடர்ந்து செய்வோம். அந்தப் பேராசை ஒன்றே, அவர்களது அனைத்துச் செல்வங்களை
யும் விழுங்கிவிடும். அவர்களுக்கு நாம் தரக்கூடிய சம்பளத் தொகையை அவ்வப்போது அதிகப்படுத்துவோம். ஆனால், அது உழைக்கும் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கு ஒருகாலும் உதவாது. வாழ்வின் அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற்றுவதன் மூலமாக, அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியாத அளவுக்குத் தடையை ஏற்படுத்துவோம். அந்த விலையேற்றம், விவசாய, கால்நடை வளர்ப்புத் தொழில் வீழ்ச்சியின் காரணமாகவே ஏற்டுகிறது என்று பழிபோடுவோம். செயல் நேர்த்தியுடன் ஆழமாகக் கட்டமைக்கப்பட்ட நம் திட்டங்கள் மூலம் உற்பத்திக்கு ஆதாரமாக இருப்பவற்றை அழிப்போம். அதில் முக்கியமாக, ஏராளமான தொழிலாளர் சங்கங்களை உருவாக்குவோம். தொழிலாளர்களைக் குடிக்க அடிமையாக்குவோம். மற்றொரு பக்கத்தில், படித்த வர்க்கத்தை அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
நமக்கான அந்த நேரம் வரும்வரை, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது; அதன் பின்னணி என்ன என்பதை கோயிம்கள் விளங்காமல் இருக்கவேண்டும். அதன் பொருட்டு உழைக்கும் வர்க்கத்திற்கு சேவை செய்வதற்காக நாம் ஆவலுடன் இருக்கிறோம் என்றும், பெரும் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய பொருளாதாரக் கோட்பாடுகளை உருவாக்குகிறோம் என்றும் முகமூடிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு சக்தி வாய்ந்த நம் பொருளாதார அரசியல் கோட்பாடுகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.
தீவிரவாத அச்சுறுத்தல் என்று பொய் பரப்புதல்
நாட்டில் உயர் மக்களான யூதர்கள் நீங்கலாக மூன்று பிரிவினர்தான் இருக்க வேண்டும்.
1. இராணுவம், 2. நமக்கு உதவி செய்யும் பெரும் முதலாளிகள் 3. கூலியாட்கள் (எதிர் இனத்தார்).
அரசியல் கொள்கைகளைப் பொறுத்தவரை அவற்றின் வெற்றி என்பது, நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் இரகசியங்களைக் கட்டிக்காப்-பதில்தான் இருக்கிறது. ஒரு ராஜதந்திரி என்று சொன்னால், அவனுடைய சொல்லுக்கும் செயலுக்கும் பெருத்த வேறுபாடு, அதாவது முரண்பாடு இருக்க வேண்டும்.
நம்மால் போடப்பட்டுள்ள திட்டங்களின் திசையில் செயலாற்ற கோயிம் அரசுகளைக் கட்டாயப்படுத்த வேண்டும். ஏற்கெனவே அந்தத் திட்டங்கள் நிறைவேறும் தருணத்தில்தான் உள்ளன. இதை நாம் எப்படி நிறைவேற்றுகிறோம் தெரியுமா? நாம் எதைச் சொன்னாலும், அதை நாம் மட்டும் சொல்லவில்லை என்றும் மக்களின் பொதுக் கருத்தும் அதுதான் என்றும் கோயிம் ஆட்சியாளர்களை நம்ப வைக்கும் உத்தியைப் பயன்படுத்தித்தான். ஆனால், மக்களின் அந்தப் பொதுக் கருத்தோ, ஊடகங்களின் துணையைக்கொண்டு நம்மால் இரகசியமாக உருவாக்கப்பட்டவைதாம். ஊடகம் இருக்கிறதே, அந்தப் பெருஞ்சக்தியால்தான் இதை சாத்தியப்படுத்த முடியும். ஏறத்தாழ பெரும்பாலான ஊடகங்கள் அனைத்தும் நம் கைகளுக்குள்தான் இருக்கின்றன.
மக்களையும், மற்றவர்களையும் திசை திருப்ப, கட்டுக்குள் வைக்க, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் என்ற வதந்தியைப் பரப்ப வேண்டும்.
கிரிமினல்களை அதிகாரிகளாக்க வேண்டும்.
(தொடரும்)