தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எதிராக இலங்கையில் சிங்களவர்களால் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்ற கொடுமைகளும் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம். – கலைஞர், தி.மு.க. தலைவர்
சிவப்பு நிறம் என்கின்ற கருத்தாக்கம் பெண்ணை உயர்த்தவோ, தாழ்த்தவோ பயன்படுத்தப்படுகிறது. எதிர்பார்ப்புகள் பொய்க்கும்போது அது ஆத்திரம் பொறாமை, மனச்சோர்வுக்கு இட்டுச் செல்கிறது. வன்முறை வெடிக்கும்போது படித்த, வசதியுள்ள, வேலைக்குச் செல்லும் பெண்ணால் அதை ஏற்க முடியாமல் போகிறது. குடும்ப வன்முறையை மாற்றமுடியாத நிலையில்தான் அவள் விவாகரத்தை நாடுகிறாள். படித்த வேலைக்குப் போகும், பொருளீட்டும் பெண்கள் வேண்டும் என்றுக் கேட்கும்போதே அவர்களுக்கு உரித்தான உரிமைகளும் வசதிகளும் அதிகாரங்களும் அளிக்கப்பட்டுத்தானே ஆகவேண்டும்?
– ப.ச.அஜிதா, வழக்குரைஞர்
இப்போது மனித உரிமைகளைக் கொன்ற ஜனநாயகமற்ற நாடாக இலங்கை இருக்கிறது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை வைத்திருக்கும் ராஜபக்ஷேவுக்கு எதிராக இலங்கையில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே இல்லை. இலங்கைக்குள் ஊடகவியலாளர்கள், எதிர்க் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், எல்லோருமே அமைதியாகி விட்டனர். அங்கு நடத்தப்பட்ட போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக எதையும் பேச முடியாத நிலையில், ராஜபக்ஷே அரசு எதிர்க்
கட்சிகைளைக் கட்டுப்படுத்தி, ஊடகங்களைத் தாக்கி, வட பகுதித் தமிழ் மக்களை எப்படி எல்லாம் சித்ரவதை செய்கிறார்கள் என்று பேசினேன். காணாமல் போனவர்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினேன். நாட்டுக்கு உள்ளும் எவரும் பேசக் கூடாது, நாட்டுக்கு வெளியேயும் எவரும் பேசக் கூடாது என் எதிர்பார்க்கிறார்கள். இது எப்படிச் சரியாகும்?
நிமல்கா ஃபெர்னாண்டோ,மனித உரிமை ஆர்வலர்
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் சட்டப்பிரிவு 13அய் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான், அங்குள்ள தமிழர்கள் சுதந்திரமாகவும், ஒற்றுமையாகவும் வாழமுடியும். – சுதர்சன நாச்சியப்பன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்