தலைப்பு வியப்பாக இருக்கிறதா?
டாக்டரின் தேவை நமக்கு எப்போது வருகிறது?
நோய் வரும் போது
நோய் வரமால் தடுக்கும் ஒரு பொருள், நாம் டாக்டரிடம் செல்வதை தடுக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பொருள் தான் நிலக்கடலை. எனவே, நிலக்கடலை டர்க்டரின் எதிரிதானே! அதன் பயணை கீழே படியுங்கள்.
சர்க்கரையைக் கொல்லும்
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால், நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்குப் பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதைக் காணலாம். நிலக்கடலைச் செடியைச் சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியைச் சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் இனப் பெருக்கம் செய்வது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே, நிலக் கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாமல் காப்பது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உண்டாகும்.
நீரிழிவு நோயைத் தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்தானது, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்னும் சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாகத் திகழ்கிறது.
இளமையைப் பராமரிக்கும்
இது இளமையைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்னும் ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின், நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடலையில் ட்ரிப்டோபான் என்னும் முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் மூளையை உற்சாகப்படுத்தும் செரட்டோனின் என்னும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.
கொழுப்பை குறைக்கும்:
தலைப்பைப் படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால், அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால், அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோ அன் சாச்சுரேட்டட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டட் 16 கிராம் உள்ளது.
இந்த இருவகைக் கொழுப்புகளும் நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்புகளாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களைக் கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது. மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே, இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களைப் பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதைத் தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடி இருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலையை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதித்தான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.
கருப்பைக் கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப் பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்குப் பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குலுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
நிறைந்துள்ள சத்துகள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துகள் நிறைந்துள்ளன.
கார்போஹைட்ரேட்- _ 21 மி.கி.
நார்ச்சத்து- _ 9 மி.கி.
கரையும் கொழுப்பு _ 40 மி.கி.
புரதம் _- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- _ 0.24 கி.
திரியோனின் _ 0.85 கி
அய்சோலூசின் _ 0.85 மி.கி.
லூசின் _ 1.625 மி.கி.
லைசின் _ 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட் _- 5 கி
கிளைசின்- _ 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) _ 93.00 மி.கி.
காப்பர் _ 11.44 மி.கி.
இரும்புச்சத்து _ 4.58 மி.கி.
மெக்னீசியம் _ 168.00 மி.கி.
மேங்கனீஸ் _ 1.934 மி.கி.
பாஸ்பரஸ் _ 376.00 மி.கி.
பொட்டாசியம் _ 705.00 மி.கி.
சோடியம் _ 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து _ 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து _ 6.50 கிராம்.
போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. போலிக் அமிலச் சத்தும் நிரம்பி உள்ளது.
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துகள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு. இதை மற்றவர்களுக்கும் பகிர்வு செய்யுங்கள். நீங்கள் பயனடைந்தது போல் உங்கள் உறவுகளும் பயனடையட்டும்.