வணக்கம்.
‘உண்மை’ சனவரி 16-31, 2019 இதழ் படித்தேன். மாண்புநிறை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 1946ஆம் ஆண்டிலேயே “நாட்டுக்கு உழைப்பதில் நாம் முந்தி நிற்போம்!’’ என எழுதி இருக்கிறார்கள். என்ன சொன்னாலும் தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனச் சொன்னால் ஏற்றிட மறுக்கிறார்களே?
“பேத நிலையை அகற்றி ஒப்புரவு நிலையை ஆக்குதலே மனிதாபிமானம் உடையவர் கடன்’’ என்றார் தந்தை பெரியார். (பக்கம் 14)
பக்கம் 29இல், கைம்மைக் கொடுமை களைந்திட வேண்டும். காதல் மணமே காணுதல் வேண்டும்.
‘பொங்கல் பரிசு’ அறிஞர் அண்ணா சிறுகதை மிக அருமை.
இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட கல் வெட்டுகளின் எண்ணிக்கை சுமார் 60,000. அவற்றுள் 44,000 தென்னிந்தியாவைச் சார்ந்த கல்வெட்டுகளாகும். அதில் சுமார் 28,000 கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள்.
கீழடி அகழ் வாய்வுக்குத்தான் எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள் போடுது மத்திய அரசு!
– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி.