பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கரின் பதினைந்தெழுத்து மந்திரம்

ஏப்ரல் 16-30

– வழக்கறிஞர் சு.குமாரதேவன்

 பல்வேறு சமயங்களைக் கடைப்பிடிக்கும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வழிபடும் கடவுள்களின் பெயரினைக் குறிக்கும் வகையில் மிகச் சுருக்கமாக சில மந்திரச் சொற்களை வைத்திருப்பார்கள். கிறிஸ்தவர்கள், ஏசுவே ஜீவன் என்றும்; இஸ்லாமியர்கள், பிஸ்மில்லா ஹிர் ரகுமான் இன் ரஹிம் என்றும்; சைவர்கள், அய்ந்தெழுத்து மந்திரம் என்று சொல்லி சிவாய நம என்றும்; ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திர சொல்லாக வைணவர்களும்; சமணர்கள், வந்தே ஜினவரம் என்றும் சொல்வார்கள். ஆனால் தந்தை பெரியார், நான் இந்து அல்ல என்ற சொல்லை, தான் வாழும் வரை வலியுறுத்தி தம் தொண்டர்கள் பின்பற்ற ஒரு சொல்லாக உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். தன் வாழ்நாள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் 13.10.1935 அன்று கீழ்க்கண்டவாறு ஒரு பிரகடனத்தை அவர் கூறினார்.

கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே, நான் உறுதியாகக் கூறுகிறேன், நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்.

மேற்கண்ட அவரது உறுதிமொழி அவரது தொண்டர்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த உறுதிமொழியில் சங்கிலி தொடர் போல் நாம் அணியமாகி அதை மற்றவர்கள் பின்பற்ற உறுதி ஏற்க வேண்டும்.

தந்தை பெரியார், பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உரைகளை அதிலும் குறிப்பாக ஜாதியை ஒழிக்க வழி என்கின்ற ஓர் ஆய்வுச் சொற்பொழிவினை மொழிபெயர்த்து தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையினை வெளிப்படுத்தினார். இன்றுவரை அந்தப் புத்தகம் பல பதிப்புகள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் வெளியிடப்பட்டு விற்பனையில் சக்கைபோடு போடுகிறது. இதைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பல பதிப்பகங்கள் மேற்கண்ட ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பினை வெளியிட்டு அந்தத் தொகுப்புகள் யாவும் தமிழகத்தில் பெறும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நூல் விற்பனை மட்டுமல்லாமல் டாக்டர் அம்பேத்கரின் பல நூல்கள் பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டு இந்து மதத்திற்கு எதிரான கருத்துப்போர் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் 2000 ஆண்டுகால வரலாறு என்பதே சமத்துவத்திற்கும், சமத்துவம் இன்மைக்கும் அதாவது பௌத்தத்திற்கு பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற ஒரு போர்தான் என்கிறார் பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர். அந்தப் போர் இன்றும் தொடர்கிறது. இந்தத் தொடர்ச்சியில் நாமெல்லாம் போராளிதான். தந்தை பெரியார் -_ பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் நட்பு சாதாரண நட்பு அல்ல. அந்த நட்பு கொள்கை ரீதியிலான சமத்துவத்துவமின்மைக்கு எதிரான ஜாதி கொடுமைகளுக்கு எதிரான ஓர் உறுதியான நட்பாகும். நான் இந்துவாக சாகமாட்டேன் என்று டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் சொன்னபோது தந்தை பெரியார் 20.10.1935 அன்று அனுப்பிய வாழ்த்துத் தந்தி பின்வருமாறு.

தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த்துக் கூறுகின்றேன்.  தங்களது முடிவை எக்காரணத்தாலும் மாற்ற வேண்டாம். அவசரப்பட வேண்டாம்.  முதலில் குறைந்தது 10 லட்சம் பேரையாவது மதம் மாற்ற வேண்டும். பிறகே தாங்கள் மதம் மாறுவது பிரயோஜனமாக இருக்கும்.  மலையாளம் உட்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்கு பலத்த ஆதரவு அளிக்கும்.

மேற்கண்ட தந்தியைத் தொடர்ந்து பெரியார் தங்களது 20.10.1935 நாளிட்ட குடிஅரசு இதழில் எழுதிய தலையங்கத்தில்.

தோழர் அம்பேத்கர் அவர்களின் கர்ஜனையும் வீரமும் ஞானமும் நிறைந்த தீர்மானம் பொது ஜனங்களால் எவ்வளவுதான் வெறுக்கப்பட்டபோதிலும் அவர் எவ்வளவு தான் தூற்றப்பட்டபோதிலும் அதுதான் _- தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வ சமய சஞ்சீவியாகப் போகிறது.

மேற்கண்ட செய்தி தந்தை பெரியார் பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் உள்ளார்ந்த இந்துமத ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஓர் உந்து சக்தியாகத் திகழ்கிறது. தந்தை பெரியார் சமூக மாற்றம், ஜாதி ஒழிப்பு இவற்றிற்கு ஓர் மாற்றாக ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். இதே கருத்தியலை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 27.06.1936 அன்று ஜனதா இதழில் எழுதிய கட்டுரையில் ஜாதிகளுக்கிடையே சேர்ந்து உண்ணுதலும், ஜாதி மறுப்புத் திருமணமும் நடந்தால் மட்டுமே சமத்துவத்தை எட்ட முடியும். அப்படியானால் அதன் அர்த்தம் சதுர்வர்ணம் ஒழிக்கப்பட வேண்டும். பார்ப்பன மதம் என்பது வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும் என்பதே என்று உறுதியாகக் கூறுகிறார். 

பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் வழி நடப்போர் அல்லது அவர் வழி நடக்க முன் வருவோர் பின்பற்ற வேண்டிய சொற்றொடர்கள் இதுதான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *