ராஜஸ்தானின் தலைநகரமான ஜெய்ப்பூரி லுள்ள காந்திநகர் ரயில் நிலையம் முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. பயணச்சீட்டு வழங்குதல் முதல் நிலைய கண்காணிப்பாளர் வரை அனைத்து பதவிகளும் பெண்களுக்கு மட்டுமே. தினமும் இங்கு வரும் 75 ரயில்களில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். ரயில்வே பாதுகாப்புப் படையிலும் பதினொரு பெண் காவலர்களை தேர்வு செய்து நியமிக்க உள்ளனர்.
எனது ஓராண்டுப் பணியில் நிலையத் தலைவராக என்னை நியமிப்பார்கள் என நினைக்கவேயில்லை. பணியிடத்தில் பாதுகாப்பு, வேகமான சேவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்! என்கிறார் ஏஞ்சலா ஸ்டெல்லா.
– தரவு: குங்குமம் 9.3.2018