தெளிவான, அதிக பிரதிகள் அச்சிடும் ஆப்செட் அச்சு இயந்திரத்தை எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
சென்னையையடுத்த நசரத்பேட்டையிலுள்ள எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் மணிக்கு 10 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளனர்.
கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.செந்தில்குமார், துணைப் பேராசிரியர் ராஜேஷ்குமார் மாணவர்கள் சதீஷ் (இயந்திரவியல் பொறியியல் மாணவர் இறுதி ஆண்டு), பி.வினோத்குமார் (இயந்திரவியல் பொறியியல் மாணவர் இறுதி ஆண்டு) ஆகியோர் இந்த இயந்திரத்தை உருவாக்கி உள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் எம்.செந்தில்குமார் கூறியதாவது: இந்தப் புதிய இயந்திரம் மூலம் உற்பத்தி விகிதம் அதிகரிப்பதுடன், செய்முறைச் சழற்சி நேரமும் குறையும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பகுதி தானியங்கி தெள்ளத் தெளிவான அச்சு இயந்திரம் இதுவே ஆகும். இந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் 10,000 பிரதிகள் அச்சிடலாம். இதர மினி ஆப்செட் இயந்திரங்களை ஒப்பிடும்போது இது இந்தியாவில் அதிக திறன் கொண்டது என்றார் அவர். ஸீ