சி.என்.ஆர்.ராவ்
பள்ளி மற்றும் கல்லூரி களில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்களை தற்போது எந்த இடத்திலும் பயன்படுத்துவதில்லை. பள்ளி மற்றும் கல்லூரி பாடத் திட்டங்களில் இடம் பெற்றுள்ள அறிவியல் தொடர்பான விளக்கங்கள் முன்பொரு காலத்தில் பயன்படுத்தப்பட்டவை.
தற்போது அதிலிருந்து நாம் வெகுதொலைவிற்கு முன்னேறிச் சென்றுவிட்டோம். தற்போதைய நடைமுறைக்குச் சற்றும் ஒத்துவராத பழைய பாடத்திட்டங்களையே கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பித்து வருவதாலேயேதான் மாணவர்களுக்கு எளிதில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இது, மாணவர்களுக்கு அறிவியல் மீது வெறுப்பு ஏற்படவும் வழிவகுக்கிறது என்று வருத்தப்பட்டிருக்கிறார் பாரத ரத்னா விருது பெற்ற அறிவியலாளரான சி.என்.ஆர்.ராவ். இவர் சொல்வதாவது, பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த அறிவியல் பாடங்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். கும்பலில் கல்வித் துறையை டார்கெட் வைத்திருப்பவரான தீனநாத் பத்ரா எழுதிய பாடங்கள் குஜராத் பாட நூல்களில் வைக்கப்பட்டுள்ளதாம். அப்படி என்ன இருக்கிறது அந்தப் பாடங்களில்?
இன்று ஸ்டெம்செல் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் மகாபாரத காலத்திலேயே நமக்கு அது தெரியும். காந்தாரிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டவுடன், வெளியேறிய சிதைந்த தசைப் பிண்டத்தை நூறு நெய்க் கிண்ணங்களில் போட்டு இரண்டாண்டுகள் பாதுகாத்தபின் அதிலிருந்து கவுரவர்கள் பிறந்தார்கள் என்று பாரதம் சொல்கிறது.
தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்துக்காரர் என்கிறார்கள். மகாபாரத காலத்திலேயே யோக வலிமையால் திவ்ய திருஷ்டி மூலம் எங்கோ நடப்பதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள் முனிவர்கள்.
அதேபோல வேதகாலத்திலேயே கார் இருந்துள்ளது. இதற்கு ஆதாரம் ரிக் வேதத்தில் உள்ளது. நம்முடைய பாரத பூமியை இந்தியா என்ற சூத்ர (இழிந்த) பெயரால் அழைத்து நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்ளக்கூடாது: நமது மதத்துக்காக உயிர் கொடுப்பது கவுரவம். அந்நிய மதங்கள்தாம் துயரங்களின் தோற்றுவாய்
எப்பூடி… அறிவியல் பாடங்கள் ரிவர்ஸ் கியரில் போய்க் கொண்டிருக்கும் இந்தப் பாடங்களுக்குப் பாராட்டுச் சொல்லியிருக்கிறார் ரிவர்ஸ் வளர்ச்சி நாயகனான மோடி. இதைப் பார்த்தால் என்ன ஆவார் சி.என்.ஆர்.ராவ்?