என்னடா.. இது! கல்கிக்கு வந்த தமிழ்ப் பற்று! சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டாராம் ஜெயலலிதா. அந்தத் தியாகத்தை, போர்க்குணத்தைப் படம் போட்டுப் பெருமைப்படுகிறது கல்கி (3.8.2014). உங்க சோலையில இந்த மயிலையும் கொஞ்சம் ஆடவிடுங்க என்று மென்மையாக சமஸ்கிருத வாரத்தை நுழைத்து, வான்கோழியாகிய இந்தியைத் திணிக்கிறாராம்.
அதனால் தமிழ்ப்பூங்காவில் மோடி நுழைக்க வந்த இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அம்மையார் தடுக்கிறார்.
அதெல்லாஞ் சரி! அனை வருக்கும் தெரியும் என்பதால் ஆதரிக்க முடியாது என்ற நிலையில், இந்தியைத் திணிப்பு என்றும் வான்கோழி என்றும் பொதுவாக எதிர்ப்பது போல் காட்டிவிட்டு, அதனினும் விஷமான சமஸ்கிருதத்தை மயில் என்று சாங்கோபாங்கமாக உயர்த்திக் காட்டுகிற வித்தை அட..அட… இதுதாங் காணும் பூணூல் வித்தை!
– அன்பன்