புராண லோகங்களும் வானியல் கோள்களும் ஒன்றா?
– பேராசிரியர் ந.வெற்றியழகன்
மேலும் இல்லை; கீழும் இல்லை
இனி, வானியல் கோள்களை _ அதாவது புவியைச் சேர்த்து மீதி உள்ள 6 கோள்களை அறிவியல் ஆய்வு அடிப்படையில் பார்ப்போம். பக்தவத்சலனார் புவிக்கு மேலுள்ள லோகங்கள், கோள்கள் என எழுதுகிறார். விண்வெளியில் மேல், கீழ் என்பதாக பிரிவினை இல்லை. புராண லோகங்கள்தான் ஒன்றன்மேல் ஒன்றாக நிலையாக இருந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளன. வானியலில் அப்படி இல்லை. எந்தக் கோளும் நிலையாக, நின்றுகொண்டே இருப்பதில்லை.
சூரியனை மய்யமாக வைத்துச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. புவியினை அடுத்து என்று தொலைவு அடிப்படையில் கூறலாமே தவிர மேல்கீழ் என்று கூறுவதில்லை.
இனி புவிக்கோளை விட்டு மற்ற 6 கோள்களை அறிவியல் அடிப்படையில் சுருக்கமாகப் பார்ப்போம்.
செல்வோம் செவ்வாய்க்கு
புவியிலிருந்து 22 கோடியே 64 லட்சம் கி.மீ. தொலைவில் செவ்வாய் (Mars) உள்ளது. சிவப்பு நிறமுடையது. வெப்பநிலை 700 _1500 தி உடையது. 2012ஆம் ஆண்டில் செவ்வாய் மேற்பரப்பில் அமெரிக்க கியூரியாசிட்டி விண்கலம் இறங்கியது. இங்கு உயிரினங்கள் இருக்க வாய்ப்பில்லை என்ற தகவலை அறிவித்தது. இதன் இரு துருவங்களில் உள்ள பனியினால் நீர் நிறைந்திருக்கிறது. புவியிலிருந்து 22,64,00000 கி.மீ. தொலைவில் உள்ளது.
மாபெரும் கோள் மண்டலம்
செவ்வாய்க்கு அடுத்து இருப்பது மாபெருங் கோள் வியாழன் (Jupitor). 2000 F வெப்பநிலை உடையது. புவியிலிருந்து 58 கோடியே 72 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.
வளையங்கள் உள்ள வான்கோள்
அடுத்துள்ளது தன்னைச் சுற்றிலும் வளையங்கள் கொண்ட சனி (Saturn).இதன் வெப்பநிலை 2250 தி. வியாழனிலும் சனியிலும் மனிதன் இறங்கவே முடியாது. புவியிலிருந்து 128 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.
கற்பனைக்கெட்டா கடுங்குளிர்க் கோள்
சனிக்கு அடுத்துள்ள கோள் யுரேனஸ் (Uranus). புவியிலிருந்து 282 கோடி கி.மீ. தொலைவு. கற்பனைக்கெட்டா கடும் குளிர் கொண்டது. நச்சுக்காற்று நிறைந்துள்ளது.
நிரம்பச் சுவையுள்ள நெப்டியூன்
யுரேனஸை அடுத்துள்ளது நெப்டியூன் (Neptune). புவியிலிருந்து 437 கோடி கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கேயும் நச்சுக்காற்றுதான் நிறைந்துள்ளது.
புத்தம் புதுக்கோள்
நெப்டியூனை அடுத்துள்ளது புளூட்டோ (Pluto) புவியிலிருந்து 573 கோடி கி.மீ. தொலைவிலுள்ளது.
ஒப்பீட்டுப் பார்வை உணர்த்தும் உண்மை:
இதுவரை, புராணக் கற்பனை மேல் ஏழு உலகங்களையும், வானியல் கோள்களையும் 7அய்யும் பார்த்தோம். இரண்டு வகையும் வேறு வேறு; முதலாவதாக உள்ளது இல்லாதது; கற்பனை; புராணம், புளுகுமூட்டை; பொய்க்கூற்று. மற்றது, அறிவியல், ஆய்வு உண்மைகள். ஆதாரங்கள் உள்ளவை.
புராண லோகங்கள்தான் வானியல் கோள்கள். இரண்டும் ஒன்று: கோள்களைத்தான் முன்னோர் லோகங்கள் என்று நம்பினர் என்று கதைக்கிறார் நூலாசிரியர்.
புராண லோகங்களில், தேவர்கள், தேவதைகள், மகரிஷிகள், மும்மூர்த்திகள், நடனமாதர்கள், ஆண்கள் பெண்களின் காமக் களியாட்டம் எல்லாம் கூறப்பட்டுள்ளன.
ஆனால், வான் அறிவியல் கோள்களில் முதனிலை நுண்ணுயிரிகள் கூடத் தோன்ற, வாழ இடமில்லை; சூழல் இல்லை.
இப்படியிருக்க உயிரினங்களின் உச்சகட்டமான மனித இனம் இருக்க, வாழ வழியில்லை. ஒப்பீட்டுப் பார்வை காட்டும் உண்மை இது.
தயங்கோம், தளரோம்:
இரண்டும் ஒன்றுதான் என முன்னோர் நம்பினர் என்று எழுதி புல்லரித்துப் போகிறார் நிலவுக்கு அப்பால் நூலாசிரியர்.
இவர் போன்றவர் இவ்வாறு மதப் புராணக் கருத்தோடு, அறிவியல் உண்மைகளோடு ஒப்பிட்டு இரண்டும் ஒன்றுதான் என்று எழுதினால் தந்தை பெரியார் பகுத்தறிவு, அறிவியல் நெறி நடக்கும் நாம் சும்மா இருக்க மாட்டோம். இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளாதவரை நாமும் மறுப்புரைக்கத் தயங்கோம்; தளரோம்!