அய்யா அவர்களைப் பேட்டி காண வந்த நிருபர் ஒருவர், இத்தனை ஆண்டுகள் இந்தத் தள்ளாத வயதிலும் பொதுக்கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறீர்களே, இதில் உங்களுக்கு அலுப்போ சலிப்போ ஏற்படவில்லையா என்று கேட்டுள்ளார்.
நிருபரின் கேள்விக்கு அய்யாவின் பதில்நான் இளைஞனா இருந்தப்ப முதல் கூட்டத்துக்கு எப்படிப் போனேனோ அதே உற்சாகம், அதிலே கொஞ்சம்கூடக் குறையாம இப்பவும் கூட்டங்களுக்குப் போறேன் என்று அய்யா அவர்கள் பதில் கூறியுள்ளார். இந்தத் தள்ளாத வயதிலும் நீங்கள் இப்படி உழைக்க வேண்டுமா? என்று கேட்டதற்கு, மூன்று வேளை சாப்பிடுகிறேன். இதற்குப் பிரதியாக நான் ஏதாவது செய்ய வேண்டாமா? நாட்டுக்குப் பயன்படுகிற மாதிரி தொண்டு செய்ய வேண்டாமா? சும்மா தின்னுட்டுத் தூங்குறது மனித குலத்துக்குத் தண்டமாக – பாரமாக இருப்பதைவிட பெரிய சமூகக்கேடு – அயோக்கியத்தனம் இருக்க முடியுமா? என்றாராம் அய்யா அவர்கள்.