– ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்
எழுதுபவன் மதுரைக் கவிஞன். அவன் அங்கு ஒட்டகத்தைப் பார்த்தான்.
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளை பைஞ்சுனை பருகி, அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்,
வடதிசை அதுவே! வான்தோய் இமயம்
தென்திசை ஆஅய் குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம்மலர்தலை உலகே. – புறநானூறு, 132ஆவது பாடல் சங்க இலக்கியத்தில் மூன்று இடங்களில் கவரி பற்றி வரும். கவரி என்ற ஒரு விலங்கைப் பற்றி _ நிறையப் பேர் இதைக் கவரிமான் என்று சொல்லி, கவரிமான் என்று படமெல்லாம் எடுத்துட்டாங்க. இது உண்மையிலேயே ஒரு மான் கிடையாது. திருவள்ளுவர்கூட மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமா அன்னார் என்று சொல்கிறார். மா என்பது விலங்கு. கவரி மா-_ன்னுதான் சொல்வார். கவரிமான் என்று சொல்லவில்லை. உரை எழுதியவர்கள் எல்லாம் அதை ஒரு மான் ஆக்கிவிட்டார்கள். ஆனால், அதற்குப் பின்னால் பரவலாக ஆராய்ச்சி செய்து இது கண்டுபிடிக்கப்படுகிறது. கவரி மா என்பது சங்க இலக்கியத்தில் கவரி உச்சி என்பது ஒரு இடத்தில் வரும். கவரி உச்சி என்றால், சவரி முடி என்று சொல்கிறோம் அல்லவா? பெண்கள் வைத்துக்கொள்கிற அந்த சவரி முடிதான் கவரி _ ககரம் _ சகரம் மாற்றமாகும். கவரி _ முடிதான் _சவரிமுடி. கவரி _ உச்சி என்பது பெண்கள் அணிந்த சவரி உச்சி. இந்த வகையில் கவரி என்பது யாக் என்று சொல்லப்படுகிற ஒரு மிருகத்திலிருந்து எடுக்கப்படுகிற அதில்தான் கவரி வீசுதல், சவரி வீசுதல், வெண்சாமரம் வீசுதல், இதெல்லாம் சவரியில் இருந்து வந்தது. இந்த கவரி என்பது இமய மலையில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு மிருகம். இந்த மிருகம் புல்லைச் சாப்பிடும். ஒரு வகையான வாசனைப் புல்லைத் தேடித்தேடிச் சாப்பிடும்.
அந்த நறும்புல்லினுடைய பெயர் நரந்தை. இது தொடர்பாக நான் காஷ்மீர் தேர்தலின்போது லடாக், லே பகுதிகளுக்கு பலமுறை பயணம் செய்திருக்கும்போது என்னுடைய ஆராய்ச்சியையும் இதில் சேர்த்துக் கொண்டேன்.
நான் அங்கே இருக்கக்கூடிய _ இது சம்பந்தப்பட்ட ஆட்களிடம் பேசினேன். திபெத் பண்பாட்டு மய்யத்திற்குப் போய் அங்கு இருக்கக்கூடிய புத்தகங்களை எடுத்துப் படித்துப் பார்த்தேன். சீனாவில் திபெத் போகிறீர்களேயானால், யாக் பிராக்ரண்டி என்ற டீ விற்பார்கள். டீ விற்கிற கடையில் யாக் பாலினுடைய வாசனைத் தேநீர் என்று ஒரு விளம்பரப் பலகை, இணையத்தில் பார்த்தால் கூட தெரியும். “தேநீர்ல நாங்கள் எந்த வாசனையும் சேர்க்கல. இந்த யாக் வந்து இருக்கக்கூடிய புல்லிலேயே ஒரு குறிப்பிட்ட வாசனைப் புல்லைத் தேடித் தேடிப்போய்ச் சாப்பிடும். அதைச் சாப்பிடுறதனால் அந்த வாசனை அதனுடைய பாலில் இறங்கி அந்தப் பாலில் இந்த டீயைப் போடுவதனால் இது வாசனை டீ என்று சீனாவில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போதும், இந்த இலையை, புல்லை வாசனைப் புல்லைத் தேடித் தின்னும் அப்படிங்கிற விஷயம் இருக்கிறதைப் பார்த்தீர்களேயானால், நரந்தை என்ற அந்தப் புல்லைக் கண்டுபிடித்த திபெத், வான்கோ இமயம் என்று இமயத்தில் மூன்று வகையான பகுதிகள் உண்டு.
1. பிஹ்மீக்ஷீ ஸிவீநீலீணீமீக்ஷீ ஷீயீ பிவீனீணீறீணீஹ்ணீ (வான்கோ இமயம் என்று பெயர்)
2. விவீபீபீறீமீ பிவீனீணீறீணீஹ்ணீ நடு இமாலயா.
3. கீழ் அடிவாரப்பகுதி, அதற்குப் பெயர் சிபா விக்கில்ஸ் என்று பெயர். இந்த மூன்று வகைகளாக இமயமலை பிரிக்கப்படுகிறது.
இதில் திரும்பத் திரும்ப சங்க இலக்கியத்தில் கவரி பதிவு செய்யப்படுகிற இடமெல்லாம் வான்தோ இமயம் என்ற சொல் வரும்.
இமயம் _ வானைத் தொடுகிற இடத்தில் அப்படிப்பட்ட உச்சியில் இந்தக் கவரி ஒரு குறிப்பிட்ட உயரத்தைவிட்டு இறங்கி வந்ததுன்னா. பனியில்லாத பகுதியில் இறங்கி வந்தால் செத்துப் போய்விடும். இது உயிர் வாழ்வதே மலையினுடைய உச்சிப் பகுதியில்தான் உயிர்வாழ முடியும். நடுப்பகுதியில்கூட வாழ இயலாது. உச்சிப் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு வகைப் புல்லைத் தேடித்தேடி உண்ணும்.
ஒரு கவிதையில் என்ன சொல்கிறார்கள் என்றால், நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளை பைஞ்சுனை பருகி
தன்னுடைய இணையோடு போய் ஆண் கவரியும், பெண் கவரியும் இந்த நரந்தை நறும்புல்லைச் சாப்பிட்டு, தகரம் என்று சொல்லப்படுகிற நிழல் கொடுக்கும் மரத்தினுடைய கிளையில் படுத்து, இன்றைக்குச் சாப்பிட்டது மாதிரி நாளைக்கும் போய் அந்தப் புல்லைச் சாப்பிடலாம் என்ற கனவோடு அந்தக் கவரி தூங்கிக் கொண்டு இருக்கிறது என்ற இலக்கியப் பதிவை சங்க இலக்கியம் பதிவு செய்கிறது.
இது வடமொழி இலக்கியங்களிலும், இந்திய இலக்கியங்கள் எதிலுமே யாக் பற்றி பேசப்படுகிறது. யாக்கினுடைய முடியைப் பற்றி காளிதாசனுடைய குமார சம்பவம் இலக்கியம் பேசுகிறது. அதில் பார்வதி கவரியினுடைய முடியின் அழகைப் பார்த்து _ பார்வதியினுடைய கூந்தலைப் பார்த்து இந்த கவரி வெட்கப்படுகிறது. இவ்வளவு நாளா நம் கூந்தல்தான் நல்லா இருக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தோம். வாலு, இதைவிட அழகா இருக்குன்னு சொல்லி காளிதாசர் எழுதுகிறார்.
இந்த மிருகம் ஒரு முடியைக் கூட இழக்க விரும்பாது. ஒரு வேடன் அடித்து செத்தா கூட சாகுமே தவிர அந்த முடியை விட்டுட்டு அது போகாது. அப்படிங்கிற ஒரு விஷயத்தையும் அங்கு இருக்கக்கூடியவர்கள் பதிவு செய்கிறார்கள். ஆனால் இதனுடைய உணவுப் பழக்கத்தை இந்தப் புல்லைச் சாப்பிடும் என்ற விஷயத்தை சங்க இலக்கியம் பதிவு செய்வதைப் போல இந்திய இலக்கியங்கள் எதுவும் பதிவு செய்யவில்லை. ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தினுடைய மிகப்பெரிய சாதனையே, அது ஒரு சமயம் சாராத இலக்கியம். ஒரு ஆவணப் பதிவு. இயற்கையோடு இயைந்த இலக்கியம். எந்தவிதமான மிகையான கற்பனைகளையும் செய்வதில்லை. மு.வரதராசனாருடைய ஜிக்ஷீமீணீனீமீஸீ ஷீயீ ழிணீக்ஷீமீ – ஷிணீஸீரீணீனீ ஜிமீஜ். அதே மாதிரி வா.சுப. மாணிக்கத்தினுடைய ஜிக்ஷீமீணீனீமீஸீ ஷீயீ லிஷீஸ்மீ வீஸீ ஷிணீஸீரீணீனீ ஜிமீஜ் என்ற இரண்டு நூல்களையும் நீங்கள் படித்தீர்களேயானால் தெரியும். ஒரு வார்த்தைகூட ணிஜ்க்ஷீணீ இருக்காது.
நெடுஞ்செவி குறும்முயல் ஒவ்வொன்றையும் தெளிவாக எழுதப்படுகிற ஒரு இலக்கியத்தில் இந்த இரண்டு மிருகங்களுமே இந்த மண்ணிற்குச் சொந்தமான மிருகங்கள் அல்ல.
மரபணுவியல் தரும் புது வெளிச்சம்
கேப்போ குருப்பியல் இது எம்_20 பிச்சப்பன் மதுரை பல்கலைக்கழகத்தில் இருக்கு. அவரோடு நான் நெருங்கிய சில ஆய்வுப் பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். ஒரிசா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் எந்த பழங்குடி மக்களுடைய மரபணு சோதனையைச் செய்தால் இந்த விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்பதை அவ்வப்போது என்னிடம் ஆலோசனை செய்துகொள்வார். அதன்படி வடமாநிலங்களில் பழங்குடிகளிடம் தொடர்ந்து செய்து வருகிறோம்.
அந்த சான்றுத் தடயங்களை எடுப்பதற்கான கிராமங்களை எனது ஊர், பெயர் ஆய்வின் மூலமாக தேர்ந்தெடுக்கிறோம் என்பதைக் கூற விரும்புகிறேன்.
எம்_20 தொல் திராவிட மரபுக்கூறு. எம்_168லிருந்து எம்_89, எம்_90 (கேப்லோ) ஜிலீமீ சிணீஜீறீஷீ நிக்ஷீஷீஜீ என்று சொல்லப்படுகிற சீ_குரோமோசோம். புதிய கற்காலத்து புலப்பெயர்கள் த புரோப்போ எலமோ டிராவிடியன் எம்_172. இது புதிய கற்காலத்தில் நடைபெறுகிற புலப்பெயர்களோடு தொடர்புடையது.
கடற்கரையோர புலப்பெயர்வு, நிலவெளி வேளாண்மை. வேளாண்மை சார்ந்த புலப்பெயர்வுகளுக்கான மரபணு ஆய்வுச் சான்றுகள் உள்ளன. இவர்களெல்லாம் செங்குந்தர். 28 சதவிகிதம் பிராகுயி மொழியைப் பேசக்கூடிய இந்த மக்களுடைய மரபணுவில் எம்_172 என்று சொல்லப்படுகிற திராவிட மரபுக்கூறுகள் இருப்பது நிறுவப்பட்டிருக்கிறது. அவர்கள் பேசுவது மட்டுமல்ல வீஸீ றிணீளீவீணீஸீ னீ-172 ணீநீநீஷீஸீ யீஷீக்ஷீ லீமீ 11.9 ஜீமீக்ஷீநீமீஸீ ஷீயீ ணீறீறீ சீ-குரோமோசோம் ஷிணீனீஜீறீமீ.
பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட சீ-குரோமோசோம்களின் மாதிரிகளை வைத்துப் பார்க்கும்போது 5000 ஆண்டுகளுக்குப் பின்னாலும், வேளாண்மைப் பெருக்கத்திற்கும் திராவிடர்களின் புலப்பெயர்வு மற்றும் பரவலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.
இதனடிப்படையில் அடுத்தகட்ட எனது ஆய்வை எடுத்துச் செல்வதற்காக இனிவரும் காலம் மனிதர்களை மய்யமாகக் கொண்ட வரலாறு. வரலாறு என்பது மண்ணைப் பற்றியதாக இருப்பதைவிட அது மனிதர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும். ஏனென்றால், மனிதர்களே வரலாற்றின் சொந்தக்காரர்கள். அவர்களே அந்த வரலாற்றைத் தூக்கிச் சுமப்பவர்கள். அவர்களே தங்களது வாய்மொழி மரபின் மூலமாக மீள் நினைவுகளைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். புவியமைப்பை விடவும், சுற்றுச்சூழலை விடவும், புவியைவிடவும் முக்கியமானவன் அந்த நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கிற மனிதன். தமிழ் மண்ணினுடைய வரலாற்றிற்கும், தமிழர்களுடைய வரலாற்றிற்கும் உள்ள இந்த நுட்பமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் நமக்கு இருக்கிறது.
வடவேங்கடம் -_ தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்தான் தமிழ்நாட்டினுடைய சங்ககாலத் தமிழகம் என்றால், துளு நாடு பற்றிய குறிப்புகளும் அந்தத் துளு நாட்டின் பின்னணியில் பேசப்படுகிற தமிழ் குறுநிலத் தலைவர்களும் பொன்படு _ கண்ணானத்தினுடைய பின்னணியில் பேசப்படுகிற நன்னனும் யார்? கோசர்கள் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதனுடைய அடிப்படையில் மனிதர்களை மய்யப்படுத்த வேண்டும் என்பதற்காக இரண்டு குடிமக்களை நான் தமிழ்நாட்டின் மாதிரி ஆய்வுக்காக தேர்ந்தெடுத்தேன். கொங்குப் பகுதியில் இருக்கக் கூடிய தமிழ் வேளாளர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார். இந்த இரண்டையும் நான் தேர்ந்தெடுக்கக் காரணம், ஒன்று வேளாண்மைக் குடி. இரண்டு வணிகக் குடி. இந்த இரண்டுமே சிந்துவெளியினுடைய அடையாளங்கள்.
சிந்துவெளியில் ஒரு சிறந்த வேளாண்மையினுடைய பின்னணி இல்லாமல் ஒரு நாகரிகம் தோன்ற முடியாது. அதே போன்ற வணிக மரபு இல்லாமல் அப்படிப்பட்ட ஒரு கடல் வணிகத்தைச் செய்து இருக்க முடியாது. இந்த அடிப்படையில்தான் இரண்டு பகுதிகளும். இந்த இரண்டு பகுதிகளிலும் காங்கேயம் காளை பற்றி ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் நாங்கள் ஒரு வரைபடத்தைத் தயார் செய்தோம். இந்த வரைபடத்தில் கொங்கு பகுதியில் இருக்கக்கூடிய வரைபடம் வேறு எங்குமே இல்லை. இந்த வரைபடத்தைச் சில நாட்களுக்கு முன்னால் தயாரித்தோம். கொங்கு பகுதியை அட்சரேகை _ தீர்க்கரேகை அடிப்படையில் இந்தப் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறோம். தொப்பூர் இது இப்ப இருக்கக்கூடிய மலைகள். அந்தப் பகுதியில் அட்சரேகை _ தீர்க்க ரேகைகளோடு கடல்மட்டத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை நாங்கள் பதிவு செய்திருக்கிறோம்.
தப்பூர், நாமக், சோவக், கொங்கர், பன்றி, பழனி, கபில், இப்படி கொங்குப் பகுதியில் இருக்கக்கூடிய மலைகளினுடைய பெயர்கள் எல்லாம் அட்சரேகை _ தீர்க்கரேகை மற்றும் கடல் மட்டத்தின் உயரத்தோடு பதிவு செய்து இந்த வரைபடத்தைத் தயாரித்து இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அழகுமலை வெண்ணமலை, ஊதியூர் மலை, தொப்பூர் மலை இப்படி ஒரு வித்யாசமான பெயர்கள் எல்லாம் இந்த மலைகள்தான். இப்படி மலைகளை, மலைகளோடும், காடுகளை, காடுகளோடும், ஊர்களை, ஊர்களோடும் ஒப்பிட்டு இப்போது இருக்கக்கூடிய மக்கள் அதனுடைய புலப்பெயர் கொங்கு நாடே 24 நாடுகளாக பிரித்து இருப்பார்கள். கோவாக்க நாடு, வாரக்க நாடு, தலைய நாடு, மண்ணி நாடு என்று 24 நாடுகள் கொங்கு மண்டல சதகம். அதேமாதிரி கானியூர் என்று இருக்கிறது. தமிழ்வேளாளர் முதன்முதலில் கானியை ஏற்படுத்திய பகுதிக்கு கானியூர் என்று பெயர். 150, 160 கூட்டம் இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திற்கு இந்தக் கானி, இந்தக் கானி இந்த நாட்டுல இருக்கும். அப்படின்னு சொல்லி ஒரு நாட்டிலிருந்து கானி -_ கானியிலிருந்து கூட்டத்தைக் கண்டுபிடிக்கலாம்.
இந்த முழு மரபினுடைய சான்றுகளையும் நம் ஊர்களிலேயும் பார்வையிட்டு இருக்கிறோம். சிந்துவெளிப் பகுதிகளில், வேளாண்மைப் பகுதிகளில் இந்தக் கூட்டங்களின் பெயர்களும், மலைகளின் பெயர்களும், கானிகளின் பெயர்களும் காணப்படும். வித்தியாசமான பெயர்கள் தமிழ்நாட்டினுடைய ஊர்ப்பெயர்கள் அனைத்தையும் அந்த இடத்தில் பதிவு செய்திருக்கிறேன். இப்படிப்பட்ட தமிழ்த் தொன்மங்களை மீட்டெடுக்கும்போது நமக்கு இரண்டு வாய்ப்பு. 1. சிந்துவெளிப் பண்பாடு ஒரு திராவிடர் நாகரிகம். அது பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புடைய பண்பாடு என்பதை நிறுவுவதில் கிடைக்கிற ஒரு பெருமை, ஒரு பெருமிதம். ஏனென்றால், சங்க இலக்கியம் தோன்றும்போது வித்தியாசமான வகையில் வெளிப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் இருக்கக் கூடிய கடற்கோள் மரபுகளில் பாண்டியர்கள் மட்டும்தான் கடல்கோள்களோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். சோழர்கள் இருந்த உறையூர் அழிந்ததுதான். உறையூர் அழிந்தது மண் மாரி பொழிந்ததனால்.இந்த மண்மாரி பொழிந்து ஒரு நகரமே காணாமல் போவது தமிழ்நாட்டினுடைய நிலை. எல்லையில் நடக்க முடியாது. அதே போலவே கடல்கோள் மரபுகள் தொடர்புடையது பாண்டியர்களோடு மட்டும்தான். இது சேரர்களுடைய மரபாலும் சோழர்களுடைய மரபாலும் வரவில்லை. தமிழ்ச்சங்க மரபுகள் பாண்டியர்களுடன் மட்டும் தொடர்புடையதாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நீண்ட நெடும் மரபுக்குச் சொந்தக்காரராகத்தான் சங்க இலக்கியம் வருகிறது. அந்தச் சங்க இலக்கியம் வரும்போது மீள் நினைவுகளில் பாண்டிய மன்னன் கடல்கோளினால் நகரம் அழிந்ததனால் தனது கூட்டங்களை அழைத்துக் கொண்டு இன்னொரு நகரத்தை அமைப்பதற்கு வருகிறான். அவன் மணலூர் என்கிற இடத்தில் முகாமிட்டுத் தங்குகிறான். மணலூர் என்கிற ஊர் கொங்கு நாடு என்றாலும் சரி, ஆதிச்சநல்லுர் பக்கத்திலே இருக்கக் கூடிய கொற்கையாக இருந்தாலும் சரி, எங்கெங்கு பழைய தமிழ் மரபுகள் இருக்கிறதோ கொற்கை போன்ற ஊர்கள் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெங்கெல்லாம் அதற்குப் பின்னால் ஒரு மணல் ஊர் இருக்கும். அது சிந்துவெளி நாகரிகம் உட்பட.அதுதான் உண்மை.
5000 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைக்கு நியூயார்க்கில் இருக்கக்கூடிய மண்காட்டன் என்ற பகுதியைத்தான் உலகத்தில் உள்ள நாகரிகத்தினுடைய கட்டமைப்பு அதுதான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்த மண்காட்டன் மொகஞ்சதாரோதான். அப்போது உலகத்தில் வேறு எங்கும் அப்படிப்பட்ட நாகரிகங்கள் இல்லை. அப்படிப்பட்ட நகர அமைப்பு இல்லை. அப்படிப்பட்ட நகர நாகரிகத்திற்குச் சொந்தமான ஒரு இலக்கியம். அந்த மன்னன் தப்பித்துப் பிழைத்து கடல்கோளில் இருந்து வந்ததாகச் சொல்லும்போது அவன் புலவர்கள் புடைசூழ நூல்களை அள்ளிக்கொண்டு வந்தார்கள் என்றுதான் மரபுகள் சொல்கிறது. பாண்டிய மன்னன் கடல்கோளில் தப்பித்து வரும்போது அவனுடன் கூட வந்தவர்கள் புலவர்கள். ஒரு மரபினுடைய தொடக்கமே ஒரு எலக்ட் சொசைட்டி. கற்றுத் தேர்ந்த ஒரு சமூகம். அதனால்தான் சங்க இலக்கியத்தில் பார்த்தீர்களேயானால் சாதாரண கணக்காயனார், வணிகர்கள், அரசர்கள், இளவரசர்கள் அரசியல் இப்படி எல்லோரும் பெண்கள். சங்க இலக்கியத்தில் 32 பெண் கவிஞர்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் அப்படிப்பட்ட ஒரு கல்விப் பரவலைச் சாதித்த ஒரு சமூகம் திடீரென்-று தோன்றியிருக்க முடியாது. அந்த நாகரிகத்திற்குப் பின்னால் ஒரு மிகச்சிறந்த தொன்மை மரபுகள் இருக்கும். அந்தத் தொன்மை நாகரிகத்தோடு சிந்துவெளி நாகரிகத்தைத் தொடர்புப்படுத்த முடியும் என்பது எனது ஆய்வு. ஆனால், அப்படிப்பட்ட ஆராய்ச்சியானது நாம் நம்பிக்கொண்டிருக்கிற லெமூரியா கண்டம் என்று சொல்லப்படுகிற அந்தக் கருதுகோளில் இருந்து மாறுபடும். ஏனென்று சொன்னால் இந்த இரண்டு கருதுகோள்களும் ஒரே திசையில் பயணிக்க முடியாது. அதுதான் உண்மை. 45,000, 50,000 ஆண்டுகளுக்கு முன்னால் பழங்கற்காலக் கருவிகள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. இங்கு மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால், சங்க இலக்கியத்தை எழுதியவர்கள், சங்க இலக்கியத்தினுடைய உரிமை கோருகிறவர்கள் மீள் நினைவாகக் கொண்டு அந்த நாகரிகத்திற்கான வரலாற்றுத் தடயங்கள், சிந்துவெளி நாகரிகத்தோடு தொடர்புடையதாய் இருக்கின்றன. அதற்குச் சான்றாக இந்த இடப்பெயர் ஆய்வுகள் இருக்கின்றன. இந்த இடப்பெயர்கள் விபத்தாக ஏற்பட்டிருக்க முடியாது. அதற்கு மாறான ஒரு கருதுகோளை ஏற்படுத்த வேண்டும் என்று சொன்னால் மரபணுக்களின் துணையோடு, தொல்பொருள் ஆராய்ச்சிகளின் துணையோடு, வேறு ஒரு வடிவத்தை, ஒரு திசையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் தேவைப்படும். இந்த அளவில் சிந்துவெளி நாகரிகத்திறகும் பழந்தமிழ்த் தொன்மங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை இந்தத் தொன்மங்கள் நிறுவுகின்றன என்பது ஒரு சிந்தனை.
(முற்றும்)
– தொகுப்பு: அ.பிரபாகரன்
var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();