துளிச் செய்திகள்

செப்டம்பர் 01-15
  • குழாய்களில் இருந்து வரும் தண்ணீரின் விசையைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையினை ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாராஜா மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி ஜெய்சக்தி கண்டுபிடித்துள்ளார்.
  • உள்நாட்டுத் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட அணுகுண்டைத் தாங்கிச் சென்று 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் பிருத்வி 2 ஏவுகணை ஆகஸ்ட் 12 அன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டு, உணவுப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் ஆகஸ்ட் 7 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • 1300 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நட்சத்திரங்கள், கோள்களைக் கண்டறியும் முர்ச்சிசன் ஒய்டுபீல்டு அரே (எம்டபிள்யூஏ) என்ற அதிநவீன ரேடியோ தொலைநோக்கியை பெங்களூரில் உள்ள ராமன் ஆராய்ச்சி மய்யம் (ஆர்ஆர்அய்) வடிவமைத்துள்ளது.
  • பணியிலிருக்கும் ஊழியர் இறந்துவிட்டால் அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல; அவ்வாறு கேட்பது உரிமையும் அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *