பூமியின் தோற்றம் தற்செயல் நிகழ்வே!

ஜூன் 16-30

வானவியல் அறிவியலாளர் டாக்டர் ப்ஃரான்சிஸ்கோ டயகோ கருத்து

டாக்டர் ப்ஃரான்சிஸ்கோ டயகோ உலகப் புகழ் பெற்ற வானவியல் அறிவியலாளர்.இவர் இலண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜின் முதுநிலை ஆராய்ச்சியாளராகவும்,இயற்பியல் மற்றும் வானியல் துறையின் தலைவராகவும் உள்ளார்.

பி.பி.சி மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகளில் கோள்கள் – பிரபஞ்சம் பற்றி நிகழ்ச்சிகளை வழங்குபவர். கோளரங்கம் அமைப்பதில் வல்லவரான டயகோ, உலகின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் தமது ஆய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். பகுத்தறிவாளரான டயகோவின் நேர்காணலை ழிமீஷ் New Humanist (May-June 2013) இதழ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் நமது உண்மை வாசகர்களுக்காக…

 

கேள்வி: நீங்கள் மதத்துடனேயே வளர்ந்தீர்களா?

பதில்: நான் மெக்சிகோவில் பிறந்தேன். அங்கே நூறு விழுக்காட்டினரும் கிறித்துவ கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அங்கே ஒவ்வொரு மனிதர் மீதும், கிறித்துவர்  தேவாலயம் ஆதிக்கம் கொண்டிருந்தது. எங்கள் குடும்பம் வழக்கமாக கோயிலுக்குப் போகும் குடும்பமல்ல. என் தாய்க்கு ஆழ்ந்த மதநம்பிக்கை உண்டு. ஆனால், என் தந்தை ஒரு நாத்திகர். இருவரும் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாகப் புலம்பெயர்ந்து வந்தவர்கள். நான் இளைஞனாக இருந்தபோது நம்பிக்கை  கொண்டவனாகத்தான் இருந்தேன். நீங்கள் நம்பிக்கை கொண்டிராவிட்டால், பாவம் தொடர்புடைய பலதரப்பட்ட கேள்விகளினால் நீங்கள் துளைத்தெடுக்கப்படுவீர்கள். மேலும், உடல்நிலை நல்நிலை பெறுதல், உங்களுக்கு நேரக்கூடிய கெட்ட நிகழ்வுகள் பற்றியெல்லாம் தொல்லைப் படுத்தப்படுவீர்கள். நான் வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள உலகத்தையும், பார்க்க ஆரம்பித்தபோது, பகுத்தறிவுப் பார்வையுடன் பார்க்க நேரிட்டவையெல்லாம், விவிலியத்துடன் முரண்பட்டு நின்றன. எப்படி ஒரு மாபெரும் இயற்கையை மாறிய சக்தி, உலகத்தையும், மனிதர்களையும் விலங்குகளையும் படைத்தன என்பது புரியாததாக இருந்தது. அங்கே முரண்பாடுகள் நிலைநின்றன. ஆக, இன்று நான் ஒரு மதமற்றவனாக இருக்கிறேன். கேள்வி: உங்களால் மதநம்பிக்கை உடையவராகவும், வானவியலாளராகவும் இருக்க முடியுமா? பதில்: என் கருத்துப்படி, ஒத்துப்போனதற்கான எந்த வாய்ப்புமில்லை! அவர்கள் வேறு வழிப்பட்ட, வேறு வகைப்பட்ட எண்ணம் கண்ணோட்டத்தில் இருந்து வந்தவர்கள். சிலர் தாங்கள் கடவுள் அல்லது கடவுளர்கள் மீது இன்னமும் நம்பிக்கை கொண்டு இருப்பதாகவும் ஆனாலும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் உலகத்தைப் பார்ப்பதால், அறிவியலாளராகவும் இருக்க முடிகிறது.  நான் அப்படி நினைக்கவில்லை.

கேள்வி: ஆனால் அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க முடியாது. இல்லையா?

பதில்: உலகத்தைப் பற்றிய பல விவரங்களை நம்மால் விளக்க முடியாது.  இருந்தாலும், உண்மையில் நாம் சில விஷயங்களுக்கு விலக்களிக்க முடியாதவர்களாக இருக்கிறோம். ஆனால், அதற்காக ஸ்டீபன் ஜே.கோல்டு (Stephen J. Gould) இடைவெளியில் கடவுள் என்று சொன்னதைப் போல, நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. ஆனால் உலகத்தின் தோற்றத்தை நம்மால் விளக்க முடியாது. அல்லது வெளிப்படையாக கண்களுக்குத் தெரிகிற முறையில் உள்ள 96 விழுக்காட்டு உலகத்தைப்பற்றியும்கூட நம்மால் விளக்க முடியாது. இந்த இடைவெளிகளை நிரப்ப  முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஸ்டீபன் ஹாகிங் (Stephen Hawking) பேசிய கூட்டத்திற்கு நான் போயிருந்தேன். அங்கே யாரோ ஒருவர் கேட்டார்; உலகத்தில் உள்ள எல்லாவற்றையும்பற்றி, நாம் எப்பொழுதாவது தெரிந்துகொள்ளுவோமா? என்று. அதற்கு அவர்,.

அப்படி நான் நம்பவில்லை மனித அறிவு அதன் பயிற்சி, கண்டுபிடிக்கும் திறன், கருத்துகளை வளர்த்துக்கொள்ளுதல்பற்றி அறிந்துகொள்ளுதல் அல்ல. அவை நமக்குச் சவால் விடக்கூடியன. நாம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருந்தால் வாழ்க்கை மிகவும் சுவை குறைந்ததாகிவிடும்.

கேள்வி: அண்டத்தின் பிற பகுதிகளில் உயிர் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: ஆம். அண்டத்தின் பல பகுதிகளில் ஆரம்பகால உயிரினங்கள் உள்ளன. அநேகமாக கோடிக்கணக்கான இடங்களில். ஆரம்பகால உயிரினங்கள் என்று நான் குறிப்பிடுவது ஆரம்பகால உயிரிகள் (Bacteria) அளவில் உள்ளவை. எந்த ஒரு அதீதமான நிலையிலும் உயிரிகள் உயிர் வாழ முடியும். அதற்கான ஆதாரங்கள் பூமியிலேயே பல இடங்களில் கிடைத்துள்ளன. ஆகவே, நிலவிலும் உயிரிகள் உண்டு. வியாழன் மற்றும் சனி கோள்களில் உள்ள பல நிலவுகளிலும், நிச்சயமாக செவ்வாய்க்கோளிலும் உயிரிகள் உண்டு. நாம் இப்போது நமது பால்வீதி கோள் கோட்டத்தில் (Milky Way galaxy) பல கோடி கோள்கள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பெற்றுள்ளோம். அவற்றில் சில உயிரிகள் அளவில் சில உயிர்கள் தோன்றுவதற்கான நிலைமைகளைப் பெற்றுள்ளன.

ஆனால், நாம் உயிர்களின் அதிகம் வளர்ந்தவற்றைப் பற்றிப் பேசும்போது, நுண்ணோக்கியின் உதவியில்லாமல் பார்க்கக்கூடிய பெரிய அமைப்புகளை (Macro structures) யூகார்யோடிக் செல்களினால் (Eukaryotic cells) பார்க்க முடியும். அவற்றைத் தயாரிப்பது மிகமிகக் கடினமான ஒன்று. பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு ஆயிரக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் ஆயின. பூமியில் தோன்றிய மனித வாழ்க்கை வரலாறு, மிகவும் கவர்ச்சிகரமானது. ஏனென்றால், அது ஒரு கிட்டத்தட்ட இயற்பியல் சட்ட ஒழுங்குகளைப் போன்று, அது ஓர் உயிரியல் மற்றும் ரசாயனக் கலவை ஆகும். அதாவது, அணுக்களை ஒன்றுபடுத்தி மோளகுயூல்கள் (Molecules) ஆக்கி அவற்றை மேலும் மேலும் சிக்கலுள்ளதாக வளர்ச்சி பெறச் செய்து, மேலும் அவற்றைப் பேரழிவு (Cataclysmic) நிகழ்ச்சிகளுக்கு உட்படுத்தி, கோள்களை மோதச் செய்து, பெரும் பூதாகரமான எரிமலை வெடிப்புகளை உண்டாக்கி, அந்தப் பூதாகரமான அழிவுகள் இயற்பியலுடனும் உயிரியலுடனும் தொடர்பில்லாதனவாக விளைந்தவை. இவை தற்செயல்களாக நிகழ்ந்தன. இந்த தற்செயல் விளைவுகள் பலமுறை வேர் வரை கவர்ந்து செய்யப்பட்ட நமது உயிர் வாழ் வழித்தடம் (Tree of Life) உயிரியல் பரிணாம வளர்ச்சியையும் கொண்டு திரும்பவும் ஒரு புது வழியில் வளர்கிறது.

நாம், பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும், அந்தத் தற்செயல் விளைவின் பல கிளைகள் ஒன்றில் வாழ்கிறோம். மற்ற கோள்கள் உயிர் வாழ் வழித்தடங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், அவைகள் மிகவும் வேறுபட்டிருக்கும்.

கேள்வி: நீங்கள் குழந்தைகளுக்கு அண்டத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பதற்குப் பள்ளிக்கூடங்களுக்குப் போகிறீர்கள். அது கடினமாக உள்ளதா?

பதில்: ஆம். ஒரு பொருளைச் சரியாகப் புரிந்துகொள்வது கடினமானதுதான்.

ஏனென்றால், நமது புத்தி (Mind) நியூட்டனுடையது போல, நேர்கோடுகளிலோ, முப்பரிமாணத்திலோ, குறுகிய காலங்களுக்குள்ளான நேரம், வெளி ஆகியவைகளிலேயே செலவிடப்படுகிறது. நாம் ஒரு நூற்றாண்டுகளைப்பற்றியோ வருங்காலத்தையோ அல்லது சென்ற காலத்தையோதான் நினைக்க முடியும். ஆனால் நாம் ஆயிரக்கணக்கான மில்லியன் ஆண்டுகளை நினைக்க ஆரம்பித்தால் நாம் நமது கால அளவைத்திறனை இழந்து விடுகிறோம். இவைகளைப்பற்றி விளக்குவதற்காக நான் கண்டுபிடித்துள்ள ஒரு வழி, கால அளவீட்டின் வரிசைப்படியானதாகும். 14 மீட்டர் நீளமுடைய ஒரு கயிறை நான் வைத்துள்ளேன். அண்டத்தின் கால வரிசையை இன்று நாம் கொண்டுள்ளது போல, அந்த 14 மீட்டர் கயிறானது, 14 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஒரு மில்லி மீட்டர் கயிறு, மில்லியன் ஆண்டுகளைக் குறிப்பதாக நாம் கருதிக் கொண்டால், அண்டத்தின் முழு வரலாறும் கொண்டுள்ளதாகச் சொல்லலாம். நான் குழந்தைகளை ஒரு மில்லி மீட்டர் நீளக்கயிற்றை ஒரு மில்லியன் ஆண்டுகளாக கற்பனை செய்துகொள்ளச் சொல்வேன். அதில் நான் முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடும் வண்ணம், அண்டவெடிப்பு (Big Bang) விண்மீன்களின் தோற்றம், சூரியக் குடும்ப அமைப்பு, பூமியில்  உயிரினம் உண்டாதல், Eukaryotic செல்கள் தோன்றுதல், டைனோசரஸ் தோற்றம் வரை அவற்றைக் குறிப்பிட ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு பொருளைத் தொங்க விடுவேன். அந்த அளவையில் கடைசியிலிருந்து 0.2 மில்லி மீட்டர் இடத்தில் மனித இனம் வருகிறது. ஒரு சிறு துண்டுக் காகிதத்தின் அளவில் மனிதகுல வரலாறு அடங்கிப் போகிறது. இந்த உலகத்தில் நம்முடைய தோற்றத்தைக் கற்பனையில் பார்ப்பதற்கு இது உதவுகிறது. குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். அது மிகவும் எளிமையானது. சிலருக்கு அது சோர்வு கொடுக்கக்கூடியதாக இருக்கும். அண்டத்தைப் பற்றி அறிந்துகொள்வது, நம்மைப்பற்றியே நாம் அறிந்து கொள்வதாகும். நாம் நம்மை அழித்துக் கொள்ள இன்னமும் ஆரம்பிக்கவில்லை. ஆனால், நான் அவர்களிடம், இந்தத் துண்டுக் காகிதத்தின் அடுத்த மடிப்பு வரும் வரை நாம் உயிர் வாழ்வோம். அண்டத்தைப் பற்றி மேலும் அறிந்து கொண்டிருப்போம் என்று சொல்வேன்.

நேர்காணல்: ஜோஸ் கான்சால்வ்ஸ்

தமிழில்: ஆர். ராமதாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *