முகநூல் பேசுகிறது

பிப்ரவரி 01-15

பெற்றோர் சம்மதத்துடன் காதலியுங்கள். -சென்னையில் நேற்று நடந்த பல சாதி அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் இப்படி ஒரு அறிவுரை இளைஞர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
பிள்ளைகளின் காதலை அங்கீகரியுங்கள் என்ற அறிவுரையை வழங்க வேண்டியதுதானே?

– Kumaresan Asak

கடவுளின் சட்டங்களைப் பற்றி நான் கடவுளிடம் மட்டும்தான் விவாதிப்பேன்

– Manushya Puthiran

 

உன் நண்பன் யார் என்று சொல்? நீ யாரென்று சொல்கிறேன் என்பது பழைய மொழி. உன் ரிங்க் டோன் என்ன என்று சொல்? நீ யாரென்று சொல்கிறேன்.
இது இன்றைய நிதர்சனம்.

– Sharmi Priya

 

இன்றோடு புக் ஃபேர் எனும் உணவுத்திருவிழா நிறைவு பெருகிறது!
#so sad

– Inamul Hasan

 

ஓய்வை முடித்துவிட்டு இன்று கொடநாடு பங்களாவிலிருந்து கிளம்பி வரும் முதல்வருக்கு, வழியில், கரகாட்டம், காவடி ஆட்டம், ஜெண்டை மேளம், பாரம்பரிய பரத நடனம், படுகர் நடனத்துடன் உற்சாக வழியனுப்பு விழா!

அப்ரசெண்டிகளா! உங்களையெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து வழியனுப்பினால் தான்டா தமிழ்நாடு உருப்படும்!

— Gauthaman Ds Karisalkulaththaan

 

 

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார்.

 

_ தமிழா நீ ஒரு சகாப்தம்

 

புத்தக கண்காட்சியில்….

தனியாக அரங்கு அமைத்து இந்து, இசுலாமிய, கிருத்துவ நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
போகிற போக்கை பார்த்தால்….

காடுவெட்டி குரு, பொங்கலூர் மணிகண்டன், அரசகுமார் போன்றவர்கள் வருங்காலங்களில் தனித் தனியாக நூல்கள் விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

–  திராவிடப் புரட்சி

 

மேற்கத்திய கலாச்சாரமே பாலியல் குற்றங்களுக்கு காரணம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர்
_ அஞ்சு பேரோட வாழ்ந்த பாஞ்சாலி, போர்சுகல் நாட்டில இருந்தா வந்தாங்க சார்.இல்லை.. அந்த கதைய எழுதினவரு.. இங்கிலாந்துகாரரா?

_ சுரேசு பெருமாள், 3 January at 22:12

தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளையும் அகற்றி, சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! -_ ஜெயாவுக்கு மதுரை ஆதீனம் அருணகிரி கோரிக்கை.
## நியாயமான கோரிக்கை , பொது இடத்தில் உள்ள எல்லா சாமி சிலைகளையும் , வழிபாட்டுத் தலங்களையும் அகற்றினாலே சாலைகள் அகன்று விடும் ! ##

– Chandran Veerasamy dec 24,2012 10.57pm

பார்வையாளனுக்கும்
நடிகனுக்கும் இடையே உள்ள ஒளிவட்ட சுவற்றை உடைத்த
என் மண்ணின் கலை….
என் மக்களின் கலை…             

–_ manivarma

அமெரிக்காவில் 100 மில்லியன் டாலர்(ரூ.540 கோடி) செலவில் கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய சுவாமிநாராயணன் கோயில் திறக்கப்பட்டுள்ளது. பார்ப்பனர்களிடம் இருந்து அமெரிக்காவும் தப்பிக்கவில்லை…அப்போ அங்கேயும் 365 நாளும் விழா கொண்டாடுவாணுக…..தமிழ்நாட்டில் இருக்கின்ற அர்ச்சக பார்ப்பான் எல்லாம் அமெரிக்காவுக்கு ஆன்சைட் போவான்!

– Paraneetharan Kaliyaperumal

ஹா,ஹா,ஹா…..ங்கொய்யாலே இன்னைக்கு நைட் பார்ல நாளைல இருந்து குடிக்க மாட்டேன்னு ஊருபட்ட பேரு சத்தியம் பண்ணி சத்தியத்தையே சோதனை பன்னுவாணுக

_ மங்குனி அமைச்சர் december 31, 2012 at 11:04am

 

நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் – ரஜினிகாந்த்
_ கோச்சடையான் ப்ரோமொசன்ஸ் ஸ்டார்ட் பண்ணிட்டிங்க போல.

_ சுரேசு பெருமாள் December 31, 2012 at 9:58am ·

 

இசைத் தமிழ் யாழினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *