ஆசிரியர் பதில்கள்

ஜனவரி 16-31

கேள்வி : முஸ்லீம் தீவிரவாதியை 4 ஆண்டுகளில் தூக்குக்கயிறில் தொங்கவிட்ட மத்திய அரசு பாபர் மசூதியை இடித்த இந்துத் தீவிரவாதிகளைக் கண்டுகொள்ளவில்லையே? _ குமார் முருகேஷ், அன்னவாசல்

பதில் : இதுதான் புரியாத புதிராக பலருக்கும் உள்ளது; 40 லட்ச ரூபாயில் ஜஸ்டிஸ் லிபரான் கமிஷனின் அறிக்கை செல்லரித்துக் கொண்டிருக்கிறது!

பதில் :முற்போக்காளர் அமைப்புகளும், இதுகுறித்து நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டம், போராட்டம் பல நடத்தியும் இன்னமும் சட்டம் குறட்டைவிட்டுக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் காவிமயமாகி விட்டதோ என்ற பலத்த சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுவிட்டது! எனன சமரச அரசியலோ அறியோம் பராபரமே!

கேள்வி : தமிழ் பேசுவதாலேயே பார்ப்பான் தமிழன் என்றால் ஆங்கிலம் பேசுவோரெல்லாம் ஆங்கிலேயரா? மண்வாசனை பேசும் மகத்தான மனிதர்களின் மூளைகூட பார்ப்பான் விசயத்தில் மழுங்கிவிடுவது ஏன்?_ சீர்காழி கு.நா. இராமண்ணா, சென்னை

பதில் :ஆரிய மாயையின் அற்புத விளக்கான விளம்பர வெளிச்சத்தில் அது மழுங்கிவிட்டது!

கேள்வி : இந்துக்கள் நரபலி கொடுத்ததாக அடிக்கடி பத்திரிகைகளில் வருகிறதே. இவர்களின் நரபலிகளை ஏற்றுக்கொள்ளும் தெய்வத்தின் பெயர் என்ன? – ஜே.அய்.ஏ. காந்தி, எரும்பி

பதில் :ஒன்றா இரண்டா? சிவன்-_கபாலி_மண்டை ஓடுகளைக் கொண்ட மாலை_சுடலைப்பொடி பூசியவன்; காளி_மகிஷி _ இப்படி இந்து புராணங்களில் பல உண்டே _ அவ்வளவு _ பெரிய புராண சிறுதொண்டர் புராண சிவன் பார்ப்பன வடிவில் சோதித்த கதையில் தாய்பிடிக்க தந்தை அறுத்த மகன் கதை மறந்துவிட்டதா?

கேள்வி : மோடியின் வெற்றிக்கு ஊடகங்களும் செய்தித்தாள்களும் அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பதேன்? – எஸ். கோவிந்தசாமி, பெரம்பலூர்

பதில் : இனம் _ ஆரியம் இனத்தோடு _ மோடி பார்ப்பனர் அல்ல என்றாலும் பார்ப்பனியத் தால் தாக்குண்ட மனிதராயிற்றே!

கேள்வி : மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பொது நூலகங்களில் ஆளுங்கட்சியின் ஆதரவு ஏடுகள் மட்டுமே இடம் பெறச் செய்வது சரியா? _ நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : சட்டப்படியும் தவறு. நியாயப்படியும் தவறு. உங்களைப் போன்றவர்கள் உயர்நீதிமன்றங் களில் பொதுநல வழக்காகத் தொடுத்து, அநீதியை அம்பலப்படுத்தி, நியாயத்திற்கு வாதாடலாமே!

கேள்வி : தனித் தெலுங்கானா பிரச்சினையில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்க முடியாமல் திணறுவது ஏன்? – எஸ். கலியபெருமாள், திருவப்பூர்

பதில் : என்னங்க… அதில் மட்டும்தானா? மற்றவைகளில்… 2ஜி தொடங்கி காவிரி நடுவர் இறுதித் தீர்ப்பு கெசட் செய்யும் வரை எப்போதாவது, எதிலாவது உடனுக்குடன் முடிவு எடுத்ததாக வரலாறு உண்டா?

கேள்வி : காதல் திருமணங்களை நாடகத் திருமணங்கள் எனக் கூறி கொச்சைப்படுத்துவது காதல் உணர்வுகளை சிறுமைப்படுத்துவதாகா? -_ எஸ். வடிவேல். ஆவூர்

பதில் : அவை நாடகத் திருமணங்கள் என்று புதுக்கதை விடுபவர் நடத்துவதுதான் நாடக அரசியல் _ அரிதார அரசியல்.

கேள்வி : இவ்வளவு அறிவுசார் சிந்தனைகள் தோன்றிய பின்னும் ஜாதி காப்பாற்றப்படுவதன் நோக்கம் என்ன?_சி. கிருபாகரன், சோளிங்கர்

பதில் : வேறு மூலதனம் கிட்டவில்லை அரசியல் நடத்த _மற்ற கூட்டணி போர்கள் நடத்த வழியில்லாதபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படு பவர்கள் துரும்பைத் தூணாகப் பார்ப்பதில்லையா? அதுபோலவே இதுவும்!

கேள்வி : இது என் விதி, தலையெழுத்து என கூறுவதின்மூலம் தமிழக மக்களிடையேயும் குறிப்பாக அ.தி.மு.க தொண்டர்களிடையேயும் தனது பழமைவாதக் கருத்துகளை தமிழக முதல்வர் திணிக்க, திட்டமிட்டு முயற்சிக்கிறார் என கூறலாமா? _ எஸ். கோவிந்தசாமி, பெரம்பலூர்

பதில் : பரிதாப வசனங்கள் மூலம் பச்சாதாபம் கிட்டாதா என்ற நப்பாசைதான்!

கேள்வி : தத்துவச் சிந்தனை ஏதோ ரகசியம் என்பதுபோல மேல்தட்டு மக்களிடமும், வயதானவர்களிடமும் அதிகம் பேசப்படுகிறது. பாமரர்களும், இளைஞர்களும் அதுபற்றி அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லையா? _ இல. சங்கத்தமிழன், செங்கை

பதில் : தத்துவச் சிந்தனையாக இருக்கட்டும்; வேறு எத்துறை சிந்தனைகளாக இருக்கட்டும், அவை மனிதர்களுக்குத்தானே! அப்படியானால் பாமரர்களும், இளைஞர்களும் தானே முழுக்கப் பயன்பட வேண்டியவர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *