Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பேராசிரியர், சுப. வீரபாண்டியன் அவர்களுக்கு ‘சமூகநீதிச்சுடர் விருது’

அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் 144ஆம் பிறந்தநாள் – சமூகநீதி நாள் விழா!
கடந்த 25.9.2022இல், மலேசியா – கோலாலம்பூரில், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அவ்வேளையில், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள், நமது சமுதாயத்திற்கு தொடர்ந்து, ஆற்றிவரும் தொண்டறத்தைப் பாராட்டி, ‘சமூகநீதிச்சுடர்’ எனும் உயரிய மாந்தநேய விருதினை மலேசிய மக்களால், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழக தேசியத் தலைவர் மானமிகு. நாக.பஞ்சு அவர்களின் முன்னிலையில், கழக மதியுரைஞர், ‘கொள்கைச்சுடர்’ இரெ.சு.முத்தையா அவர்கள் வழங்கினார். நிகழ்வை, பகாங், சபாய் சட்டமன்ற உறுப்பினர், மாண்புமிகு. தமிழச்சி காமாட்சி அவர்கள் நன்முறையில் நடத்திவைத்தார்.