Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இந்து மதத்தில் பெண்கள் நிலை

ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத் தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும் கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வண வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே – காம வேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உபநிஷதர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்.

பெண்ணாய்ப் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே.

– பாரதம், அனுசான்ய பருவம்

பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்பு போன்றவள்; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள், க்ஷவரக்கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.

ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்.

– பாகவத் ஸ்கந்தம் 4.14.1942

பெண்கள் பாப ஜென்மங்கள், அவர்களுக்கு ஒழுக்கம் கிடையாது. பாதுகாக்கும் அளவுக்குத்தான் அவர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும் என்பது இந்து மதத்தின் கருத்தாகும்.

இப்பொழுது சொல்லுங்கள் – பெண்களைக் கேவலப்படுத்தும், இழிவுபடுத்தும் இந்த இந்து மத சாஸ்திரங்களை எரிக்க வேண்டுமா  – வேண்டாமா?