பாலக்காட்டில் இயங்கிவரும் கேரள அரசு மருத்துவக் கல்லூரியில் அண்மையில் நடந்த ஒரு விழாவுக்கு பிரபல மலையாளப் பட உலக இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
அனில் ராதாகிருஷ்ணன்
மாணவர் சங்கத்தின் இதழை அரங்கில் வெளியிட இளம் முன்னணி நடிகர் பினீஷ் பாஸ்டின் அழைக்கப்பட்டிருந்தார்.
பினீஷ் பாஸ்டின்
இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கலைஞர். “இவரோடு சரிசமமாக மேடையில் நானா? முடியாது!’’ என்று அறிவித்து அழைப்பை நிராகரித்துள்ளார் இயக்குநர்.
எரிமலையாக வெடித்துக் கிளம்பிய நடிகர் பினீஷ் விழா நாளில் தரையில் அமர்ந்து கண்டன அறிக்கையை வாசித்துள்ளார். “நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் அவமதிக்கப்பட்டிருக்கிறேன். சாதாரண கட்டிடத் தொழிலாளியாக இருந்து முன்னேறியவன் நான். நானும் மனிதன்தான். என்னை இழிவுபடுத்தியது மிகப்பெரிய கொடுமை!’’ என்று குறிப்பிட்டிருந்தார் தனது அறிக்கையில்.
போராட்டம் தீவிரமானதும் இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கோரி விட்டாராம். அவமரியாதை செய்தவர் சுயமரியாதைக்காகப் போராடிய இளைஞரிடம் பணிந்துள்ளார்.
– எம்.ஆர்.மனோகர்,
(ஆதாரம்: ‘தி இந்து’ (ஆங்கிலம்) – 2.11.2019)