Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

விண்வெளி வீரர்களின் உணவு

விண்வெளிப் பயணத்தில் இருக்கும் வீரர்கள், மாத்திரை வடிவிலேயே உணவைச் சாப்பிடுவார்கள் என்ற செய்தி ரொம்ப காலமாகவே சுற்றுகிறது. ‘அய்யோ பாவம் நம்ம விண்வெளி வீரர்கள்’ என்று நாமும் பரிதாபப்படுகிவோம். ஆனால், உண்மையே வேறு. அவர்கள் நம்மைவிட ருசியாகச் சாப்பிட்டவாறு விண்வெளியில் தங்கள் வேலையைச் செய்வார்கள். விண்வெளி வீரர்களுக்கு உணவு சமைப்பதற்காக நாசாவில் தனி அறையே உள்ளது. பீட்சா, பர்கர், ஃப்ரூட் சாலட், சிக்கன் வெரைட்டி என 200க்கும் மேற்பட்ட உணவுகள் அவர்களின் மெனுவில் உள்ளன.