Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முற்றம் : நூல் அறிமுகம்

தலைப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் முழக்கம்

தொகுப்பாசிரியர்: கு.வரதராசன்,   பேராசிரியர் தங்க.பிரகாசம்

வெளியீடு:    கவிமாறன் பதிப்பகம்,

                    36, முதன்மைச் சாலை,                                                                    பூலாம்பாடி – 621110.

                    வேப்பந்தட்டை வட்டம்,

                    பெரம்பலூர் மாவட்டம்.

பக்கங்கள்: 160  நன்கொடை: ரூ.100/-

இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற சிந்தனையாளரான தந்தை பெரியார் தத்துவவாதியாக மட்டுமல்லாமல், அந்தத் தத்துவத்தை பயன்படுத்தி சமத்துவ அறிவுடைய சமுதாயத்தை கட்டி எழுப்ப ஒரு இயக்கத்தை உருவாக்கி, இயக்கத்துக்கான கொள்கைத் திட்டங்களை வரையறுத்தவர். தாமே அந்த இயக்கத்தின் “முதன்மை பிரச்சாரகராகவும்’’, “இயக்கத்தை கட்டமைப்பவராகவும்’’ விளங்கினார்.

தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தார். சாலை வசதிகள் இல்லா நிலையிலும்கூட. அந்த ஓய்வறியா பயணங்களின் விளைவே இன்றைய தமிழகத்தின் சமூக மறுமலர்ச்சியாகும். அவ்வாறு பெரியார் அவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஊர்களில் மேற்கண்ட பயணத் தொகுப்பே இந்நூல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் பங்கேற்ற ஊர்களை அகர வரிசைப்படுத்தி அதனுள் பங்கேற்ற நிகழ்வுகளை காலவரிசைப்படி வழங்கியுள்ளார் தொகுப்பாசிரியர். அங்கு ஆற்றிய ‘விடுதலை’யில் பதிவான உரைகளையும் இடையில் முழுமையாக தொகுத்துள்ளார். மேலும் “பெரம்பலூர் மாவட்ட பெரியார் பெருந்தொண்டர்களின்’’ பட்டியலையும் கொடுத்துள்ளார்.

– உ.வை.க.அரசன்