Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : பெரியார்

முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் சிறப்புக் கவிதை

 

இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர்

இடி இழக்கம் கேட்டது போல் – திணறிப் போனார்

பின்னிவைத்த மதங்கடவுள் மடத்தன்மை யெல்லாம்

மின்னலது வேகத்தில் ஒடியுது காண்!

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்,

ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!

ஈ.வெ.ரா. என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின்

அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்!

அவர்

வெண்தாடி அசைந்தால் போதும்

கண் ஜாடை தெரிந்தால் போதும்;

கறுப்புடை தரித்தோர் உண்டு

நறுக்கியே திரும்பும் வாள்கள்!!

 

 (1945ஆம் ஆண்டு எழுதிய கவிதை)