Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

‘சிந்தனைச் சிற்பி’

ம. சிங்காரவேலர்

நினைவு நாள் : 11-02-1946

‘சிந்தனைச் சிற்பி’ ம.சிங்காரவேலர் தலைசிறந்த சிந்தனையாளர். இந்தியத் துணைக் கண்டத்தில் பொதுவுடைமை இயக்கத்தையும், அதன் சிந்தனையையும் உருவாக்கிய முன்னோடிகளில் தலையாயவர். பகுத்தறிவுக் கருத்துகளையும் அறிவியல் சிந்தனைகளையும், பரப்பியதில் அவரொரு வழிகாட்டியாக விளங்கியவர். அரசியல், அறிவியல், பொருளியல், மெய்யியல், உளவியல், வானியல் போன்ற துறைகளைத் தமிழில் முதன்முதலில் எளிமையாக எழுதிக் காட்டியவர். தந்தை பெரியார் தாம் நடத்திய ‘குடிஅரசு’ ஏட்டில் அவரது கருத்துகளை வெளியிட்டதோடு நூல்களாகவும் பாமர மக்களிடம் கொண்டு சென்றார். விடுதலை இயக்க வீரராகவும், தொழிற்சங்க இயக்க முன்னோடியாகவும் விளங்கியவர். தம் இறுதிக் காலம்வரை போராளியாக விளங்கி, ஓயாது எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் தொண்டாற்றிக் கொண்டிருந்தார்.