Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நூல் அறிமுகம்

நூல்: புரட்சிப் பா பகர்வன் திருவள்ளுவர்

ஆசிரியர்:  தமிழ்மறையான்

வெளியீடு: புத்தர் அறிவுலகம்,

                   திருவள்ளுவர் தமிழ் இலக்கிய மன்றம்,

                    6,3ஆவது அவென்யூ,                  

                   அசோக் நகர்,

                   சென்னை-83.

தந்தை பெரியார் ஏற்று, போற்றிய தமிழரின் அறிவுச் செல்வமாம் திருக்குறளை ஆய்வு செய்து ஆய்வு மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்பட்டு அவர்களின் சிந்தனைப் போக்கை மாற்றியமைக்கும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் ஆய்வாளர் தமிழ்மறையான்.

திருக்குறளில் உள்ள சொற்களுக்கு உரையாசிரியர்களால் திணிக்கப்பட்ட மூடநம்பிக்கை விளக்கங்களை முறியடிக்கும் வகையில் அச்சொற்களுக்கு திருக்குறளின் வேறு இடங்களில் சரியான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.

குறிப்பாக ‘தொழுதல்’, ‘அடிச்சேருதல்’, ‘வாலறிவன்’, ‘அறன்’, ‘அறம்’, ‘தானம்’, ‘தவம்’, ‘இம்மை’, ‘வைக்கப்படும்’ உள்ளிட்ட எண்ணற்றச் சொற்கள் திருக்குறளில் வெவ்வேறு குறட்பாக்களில் ஒன்றிற்கு விளக்கம் மற்றொன்றாக கொடுக்கப்பட்டுள்ளதை விளக்குகிறார் நூலாசிரியர்.

திருக்குறள்ஆய்வு செய்பவர்கள், சரியாக பின்பற்ற நினைப்பவர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

– உ.வை.க.அரசன்