Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குறும்படம்

‘பொண்ணு ஒன்னும் கிடைக்கல’

தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆண் எதிர்பார்ப்பது போல, பெண்ணும் எதிபார்ப்பாள் என்பதை சமூகம் இன்னமும் முழுமையாக ஏற்க மறுக்கிறது. மாற்றங்கள் பெருமளவு வந்துவிட்டாலும், கண்ணுக்குப் புலப்படாத ஆண் ஆதிக்கச் சுவர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த முக்கியமான பிரச்சனையை ரசிக்கக்கூடிய திரைக்கதையுடன் நல்ல நகைச்சுவையுடனும் கையாண்டு வரதட்சனை, வயது, நிறம் இன்னபிறவற்றையும் பகடி செய்து ஆண் பெண் சமத்துவத்தை நிலைநாட்ட முயல்கிறது ‘பொண்ணு ஒன்னும் கிடைக்கல’ குறும்படம். இதை எழுதி இயக்கி இருப்பவர் அருள்செல்வன். பார்க்க வேண்டிய குறும்படம்.

– உடுமலை