Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மண்டல் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில்… யாரால்?

“தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லாத் தலைவராக திரு.வீரமணி அவர்கள் இருக்கின்றார்கள். அவர் கிறித்தவ, முஸ்லிம், தாழ்த்தப்பட்ட மக்களுடைய தலைவராக ஆகிவந்து கொண்டிருக்கின்றார்.

மண்டல் கமிசனைப் பற்றி நான் மிகச் சுருக்கமாகவே சொல்ல விரும்புகிறேன். இந்திய அரசு, மண்டல் கமிசன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கக் கூடத் தயாராக இல்லை.

நாடாளுமன்றத்தில் உள்ளே சுமார் ஆறு எம்.பி.க்கள் போராடியதன் விளைவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே திரு.வீரமணி அவர்களும் போராடியதன் விளைவாகத்தான் மண்டல் கமிசன் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

– வி.டி.ராஜசேகர் ஷெட்டி,

13.6.1982, திருச்சி மாநாட்டில்…