
‘உண்மை’ ஆகஸ்ட் 16-31, 2018 இதழில் வெளிவந்த அட்டைப்படம் அருமை! தந்தை பெரியார், தன் செல்லப் பிள்ளை கலைஞருக்கு மாலை அணிவித்து மகிழும் புகைப்படம் மலரும் நினைவுகளாக அமைந்திருந்தது.
இவ்விதழில், “அண்ணாவின் அருகே அவரது அருமைத் தம்பி கலைஞர்!’’ என்ற தலைப்பில், ஆசிரியர் அவர்கள் எழுதிய தலையங்கத்தை, படித்ததில் எனக்குப் பிடித்தது, “அறிஞர் அண்ணா நினைவிடம் அருகே கலைஞரின் பூதவுடல் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறது’’ என்ற வைர வரியே!
“என்றும் வாழ்வார் எங்கள் கலைஞர்!’’ என்ற தலைப்பில் மஞ்சை வசந்தன் எழுதிய கவிதை வரிகள் ஒவ்வொன்றும் என்னெஞ்சை நெகிழ வைத்தது.
நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகளையும், புரையோடிப் போன மூடநம்பிக்கைக் கருத்துகளையும், நகைச்சுவை உணர்வோடு மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த பெருமை கலைவாணர் ஒருவருக்கே உண்டு. அப்பெருமகனின் நினைவு நாள்: ஆகஸ்டு 30.
தந்தை பெரியார் அவர்கள் என்.எஸ்.கே அவர்களை, ‘லெனின்’ அவர்களோடு ஒப்பிட்டுக் கூறிய உவமை, அவருடைய நற்பெயருக்கு புகழ் மகுடம் சூட்டியதுபோல் அமைந்திருந்தது. அன்று படிக்க மறந்ததை இன்று படித்துத் தெரிந்துகொண்டேன். ஆசிரியருக்கு எனது உளம் கனிந்த நன்றி!
அன்புடன்,
—- தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி


Leave a Reply