– மஞ்சை வசந்தன்
உணர்வுக் கடல்நீர்
குமுறல் சூட்டில்
கொதித்து எழுந்து
இருகண் வழியே
இறங்கும் மனமழை!
ஏழைகள் நித்தம்
இறக்கி வைக்கும்
இதயச் சுமை!
வளரும் குழந்தைக்கு
வலியின் வடிகால்;
விருப்பம் நிறைவேற
விடுக்கும் விண்ணப்பம்!
பள்ளிப் பிள்ளைக்கு
பாசாங்குக் கருவி!
வாலிபப் பருவத்தில்
வராது தடுத்தாலும்
குடும்ப வாழ்வில்
நிரம்பி வழியும்!
முதுமைக் காலத்து
முறையீட்டு மொழி!
இறந்த பின்பு
எல்லோரும் பெறும்
இலவசப் பரிசு!
உருண்டு திரண்டு
ஒரே வடிவில்
உதிர்ந்த போதும்,
உதிர்க்கும் ஆளின்
உணர்விற் கேற்ப
உள்ளடக்கம் மாறும்!
Leave a Reply