Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குலக்கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியைக் கொண்டு வருவதா? பொங்கி எழுந்த புரசை பொதுக்கூட்டம்!

மீண்டும் குருகுலக் கல்வியை கொண்டுவர திட்டம் தீட்டி, உஜ்ஜனியில் 2018 ஏப்ரல் மாதம் ஆர்.எஸ்.எஸ். ஒரு மாநாடு நடத்தியது. அதில் குருகுலக் கல்வியினை பலப்படுத்துவது, பரவலாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.

“குருகுலக் கல்வி என்னும் பெயரால்

மீண்டும் குலக்கல்வித் திட்டமா?’’

என்னும் தலைப்பில் வடசென்னை மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் 6.6.2018 அன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு ‘தமிழர் தலைவர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் ‘புரட்சிப் புயல்’ வைகோ அவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

“ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக் கண்ணைக் குத்தக்கூடிய ஒரு சூழ்ச்சித் திட்டம்தான் இந்த குருகுலக் கல்வித் திட்டம். குருகுலக் கல்வியென்றால் என்ன? வீட்டுத் தொழுவத்தில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு உட்கார்ந்திருக்க வேண்டும். ஞானாசிரியராக இருக்கின்ற பார்ப்பனர் அவருக்கு சொல்லிக்கொடுக்க எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வருவார். இதுதான் குருகுலக் கல்வி. அப்படிப்பட்ட ஒரு கல்வி முறையைத்தான் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதல்படி மோடி அரசு கல்வித் திட்டமாகக் கொண்டுவர ஏற்பாடு செய்து வேலை செய்கிறார்கள்.

‘புரட்சிப் புயல்’ வைகோ உரை

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. நாட்டிற்கு இழைத்துவரும் கொடுமைகளையும் எடுத்துக் கூறி ஆவேசமாய் உரையாற்றினார். மேலும், “அண்ணன் வீரமணி அவர்கள் முன்னெடுக்கும் அத்துணை போராட்டங்களுக்கும் இந்த வைகோ வருவான்’’ என்று கூறியபொழுது கரவொலி விண்ணைப் பிளந்தது.