Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நூல் அறிமுகம்

 

தலைப்பு: “அம்மா ஊட்டிய

                            நிலாச்சோறு”

ஆசிரியர்: எடையூர் ஜெ.பிரகாஷ்

வெளியீடு: அபிரா புக்ஸ்(டீச்சர் வீடு), புதுத்தெரு, எடையூர் அஞ்சல். திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614702.

கைபேசி: 8939319329

பக்கம்: 96    விலை: ரூ.80/-

 

 

சிறப்பான நறுக்குக் கவிதைகளைக் கொண்ட  நூல். நம் கண் முன்னால் நடைபெறும் சமூக கொடுமைகளை அவலங்களை கவிதைகளால் சாடும் இந்நூலாசிரியர் பல்வேறு இடங்களில் மூடநம்பிக்கைகளை சாடுகிறார். கவுரி லங்கேஷ் கொலை குறித்தப் பதிவில் ….

கவுரி லங்கேஷ் மரணம்

ஓர் எழுதுகோலை

துப்பாக்கிக்கொண்டு

முறியடித்துவிட்டோம் என்று

மார்தட்டிக்கொள்ளும்

சமுதாயமே…

 

அந்த – ஓர்

எழுதுகோலுக்காக

ஓராயிரம்

எழுதுகோல்கள்

பிறந்திருக்கின்றன என்பதை

நீங்கள்

அறியவில்லைபோலும்…

 

எப்போதும்

ஒன்றை மட்டும்

தெரிந்துகொள்ளுங்கள்

எழுதுகோல்கள் எழக்கூடியவை…

ஆயுதங்கள் அழியக்கூடியவை !

‘நீட்’ என்னும் கொடிய நஞ்சுக்குப் பலியான சகோதரி அனிதாவை பற்றிய கவிதை…

 

அனிதா மரணம்

நுகர்ந்தவுடன்

வாடிவிடும்

அனிச்சம்போல்

இங்கேயும்

ஓர் உயிர் மலர்

மருத்துவக் கனவை

நுகரும் முன்

நிரந்தரமாய்

இமை மூடிக்கொண்டது!

 

                            இப்படிப் பல…