Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

 

இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை காணாமல் போகின்றன என்பது அதிர்ச்சித் தகவல்.

தமிழகத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 8 லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் குழந்தைகளை உடல் உறுப்பு திருட்டுகளுக்கும் புது மருந்து கண்டுபிடிக்க பரிசோதனை எலிகளாகவும் பயன்படுத்தப்படும் அபாயங்களும் உண்டு!  முடிவு மரணம்தான்!

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியா முழுவதும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் 14 மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.