டில்லியில் நடந்த கல்வி புரனமைப்பு சீர்திருத்த கருத்தரங்கம் ஒன்றில் பிரதமர் வாஜ்பாய், மனிதவளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி உட்பட பல ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருதம் கட்டாயம், பள்ளி மாணவர்களுக்கு வேதம் மற்றும் மந்திர உபநிடதங்கள் பாடங்களாக அமைக்க வேண்டும் என்ற கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.முரளி மனோகர் ஜோஷியின் இந்த அறிவிப்பிற்குப் பின்னனி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த பிரமுகர் பி.டி.சித்தலிங்கையா திட்டம்தான். இதுகுறித்து முரளிமனோகர் ஜோஷி கூறியதாவது, “சித்தலிங்கையா ஏழைகளுக்காக 1300 பள்ளிகளை நடத்தி வருகிறார். ஆகவே, அவரது திட்டத்தில் மாணவர்களின் மீதான அக்கறை மட்டுமே இருக்கும்’’ என்று தெரிவித்தார்.
இதில் பள்ளி துவங்கும்பொழுது தேசிய கீதத்திற்கு முன்பாக சரஸ்வதி வந்தனா பாடவேண்டும், குருவந்தனமும், பாதபூஜைகளும் பள்ளிகளில் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.வித்யாபாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். கல்வி அமைப்பின் கீழ் நாட்டின் அனைத்து பள்ளிகளையும் கொண்டுவருவது பற்றியும் அதற்கென ஒரு தனித்துறை அமைத்து, அந்தத் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை வித்யாபாரதியிடம் வழங்கி அவர்களுக்கு அலுவலகம், நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று சித்தலிங்கையா கொடுத்த கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.