தமிழ்நாட்டில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர் புத்தநெறிக்கு ஆக்கம் தந்தவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைநாதமாகத் திகழ்ந்தவர் என்கிற முறையில் அயோத்திதாசப் பண்டிதருக்கு (1845-1914) முக்கிய இடம் உண்டு. நூறு ஆண்டுகளுக்குமுன் நம் மக்களுக்காக ஒரு இதழை நடத்தவேண்டும் என்ற சிந்தனையும், துணிவும் சாதாரணமானதல்ல. ‘ஒரு பைசா தமிழன்’ என்ற பெயரில் இவரால் தொடங்கப்பட்ட இதழ் பிறகு ‘தமிழன்’ என்ற பெயரில் தொடரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இலங்கை, சிங்கப்பூர், பர்மா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளிலும்கூட அந்த இதழ் பரவியதுண்டு.
அவரது பகுத்தறிவு சிந்தனைகள் வினாக்களாக வெடித்துக் கிளம்பின. தமிழ், சமஸ்கிருதம், பாலி, ஆங்கில மொழிகளில் புலமை வாய்ந்தவர் அவர். பல அரிய ஆய்வு நூல்கள் அவரால் எழுதப்பட்டன. 1881 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தாழ்த்தப்பட்டவர்களை பூர்வத்தமிழர் என்ற பெயரால் குறிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
அவரது நினைவு நாள் : 05-05-1914
Leave a Reply