Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திட்டமிடும் திறன் மிக்கவர்!

நண்பர் கி.வீரமணி அவர்களுக்கு நிரம்ப நுண்ணறிவுண்டு. எதிர்காலக் கணிப்பு பற்றிய அறிவுத் திட்பம் அவருக்கு நிறைய உண்டு. அவரோடு கலந்து பேசிய பொழுதெல்லாம் அவர் எண்ணிக் கோடிட்டுக் காட்டிய எதிர்கால நிகழ்வுகள் அப்படியே நடந்தன. பழகுதற்கினிய பண்பாளர்; இனநலம், இனமானம் காப்பதில் உறுதியான பிடிப்புள்ளவர்;

 சிறந்த பேச்சாளர்; ஆற்றல்மிக்க எழுத்தாளர்; இயக்கத்தின் நோக்கங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும் திறனுடையவர்; இந்தத் தலை முறையின் புதிய வரலாறு படைப்பதில் அவர்கள் வெற்றி பெறுமாறு பாராட்டி வாழ்த்துகிறோம்.

– குன்றக்குடி அடிகளார், தமிழகம் சித்திரை இதழில்

(‘விடுதலை’ 21.4.1978)