சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

ஆகஸ்ட் 16-31

நூல்    :    வானியல் புதிரும் தெளிவும்

ஆசிரியர்    :    கி. அழகரசன்

வெளியீடு    : அறிவரசன் பதிப்பகம்,

21/49, பாலமுத்து தெரு, எல்லீஸ் ரோடு, சென்னை – 2.

பக்கங்கள்    :    168 விலை :    ரூ. 60/-

சந்திரனின் சுற்றுச் சுழற்சி

சோவியத் நாட்டின் வெளியீடான நெஞ்சை ஈர்க்கும் வானவியல் வி.கொமரோவ் என்பவரால் எழுதப்பட்டு, அ.நடராஜன் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்ட அப்புத்தகத்தில் சந்திரனின் சுற்றுச் சுழற்சியைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ள விவரங்களாவன :

பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள பரஸ்பர இயக்கம் காரணமாக சந்திரனின் சுற்றுப் பாதைக்கும், பூமியின் நடுக்கோட்டுத் தளத்திற்கும் இடையே உள்ள சாய்வுக் கோணம் 180 யிலிருந்து 290 வரையில் ஏற்றம் அடைகிறது.

இருப்பினும் இந்த 110 வித்தியாசம் என்பது 18 ஆண்டுகளுக்கும் மேலான கால அளவுகளில் ஒழுங்கான கால இடைவெளியில் சமன்பாடு என்ற நிலை அடைகின்றன – என்ற வரையறை கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த வரையறையின் அடிப்படையிலேயே, நம் பால்வழியில் ஏற்பட்ட நட்சத்திர மண்டலங்களின் மாற்றங்களையும் கண்டறிந்து, உற்று நோக்கல் மற்றும் யூகித்தறிதல் அடிப்படையில் உள்நிலைக் கோள்களின் உள்வட்டச் சுருள் சுற்றுகள் முதல் 18 ஆண்டுகளும் வெளிவட்டச் சுருள் சுற்றுகள் அடுத்த 18 ஆண்டுகளுமாக, 18 + 18 = 36 ஆண்டுகளுக்கு ஒரு முறையே துணைக் கோள்கள் உட்பட சமன்பாடு என்ற நிலையினை அடைகின்றன என்ற புதிய வரையறை கொடுக்க முடிந்தது என்பதறிக.

பூமியின் துணைக்கோளான சந்திரனின் சுற்றுச் சுழற்சி என்பது 27 1/2 புவி நாள்களுக்கு ஒரு சுற்று என்ற அளவில் மேற்கிலிருந்து கிழக்கான இடப்பக்கச் சுற்றாக நடைபெறுகிறது. பூமியை மய்யமாகக் கொண்டு சந்திரன் சுற்றிவருவதால் சந்திரனின் சுற்றுச் சுழற்சியை, கோள்களின் சுற்றுச் சுழற்சியுடன் சேர்க்க முடியாத நிலை.

பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் தற்சுழற்சி என்பது, பூமியின் தற்சுழற்சியான மேற்கிலிருந்து கிழக்கான திசைச் சுற்றுக்கு ஈர்ப்புக்கு ஈர்ப்பே எதிர்ப்பு என்ற பண்பின்படி எதிர்த் திசையான, கிழக்கிலிருந்து மேற்கான தற்சுழற்சியையே கொண்டிருக்கும் என்பதை முன்னரே கண்டோம்.

பூமியைச் சுற்றிவரும் சுற்றுச்சுழற்சியில், சந்திரனின் சுற்று என்பது மேற்கிலிருந்து கிழக்கான இடப்பக்கச் சுற்றாக எதிர்மறையாகவே அமைந்திடும் /அமைந்திருக்கும்.

(காண்க : படம் –1)

இயற்கை நிகழ்வின் உண்மை நிலைக்கு ஏற்ப, எடுத்துக்காட்டாக, பூமியானது மேற்கிலிருந்து கிழக்கான தற்சுழற்சியைப் பெறுவதால், பூமியிலிருந்து செல்லும் ஒரு செயற்கைக் கோளானது பூமியை மேற்கிலிருந்து கிழக்காகவே சுற்ற வேண்டும். அப்போதுதான் அச்செயற்கைக் கோள் பூமியைச் சுற்றி வர முடியும். இதன்படி அல்லாது வளிமண்டலத்திற்கு மேலே செயற்கைக் கோள் உட்பட எந்தப் பொருளும் கிழக்கிலிருந்து மேற்காக சுற்ற முடியாது என விஞ்ஞானியினர் வரையறை செய்திருக்கின்றனர்.

மேற்கண்ட வரையறையின்படி பூமியின் துணைக் கோளான சந்திரனும் பூமியை மேற்கிலிருந்து கிழக்காகவே சுற்றி வரவேண்டும்/சுற்றி வருகின்றது என்பது இதன் மூலம் உறுதியாகிறது என்பதறிக.

கூடுதல் விவரமாக, தற்சுழற்சியில் தன்னைத் தானே கிழக்கிலிருந்து மேற்காக சுற்றிக் கொண்டிருக்கும் சூரியனை, அதன் ஈர்ப்பு ஆற்றலுக்கு உட்பட்ட கோள்கள் அனைத்தும் கிழக்கிலிருந்து மேற்கான வலப்பக்கச் சுற்றாக சுற்றி வருவதைப் போன்று தற்சுழற்சியில் தன்னைத் தானே மேற்கிலிருந்து கிழக்காக சுற்றிக் கொண்டிருக்கும் பூமியை, அதன் துணைக் கோளான சந்திரன் மேற்கிலிருந்து கிழக்காக எதிர்மறையாக சுற்றிவருகின்றது என்பதே இயற்கையின் நியதியும் உண்மை நிலையுமாகும்.

* * *

சூரிய குடும்பத்துக் கோள்களின் நிலைப்பாடு

நட்சத்திரமாகிய சூரியன் அனைத்துக் கோள்களையும் தன்னை நோக்கி நெருங்கி வரும்படி ஈர்க்கிறது. இதன் காரணமாகவே ஈர்ப்புக்கு ஈர்ப்பே எதிர்ப்பு – என்ற புதிய வரையறையின்படி கோள்கள் அங்கங்கே நின்றிருப்பதற்கு/ நிற்பதற்கு முதல் காரணமாகிறது.

உள்நிலைக் கோள்கள் அனைத்தும், முதலில் உள்வட்டச் சுற்றும், அதன் பின் வெளிவட்டச் சுருள் சுற்றும் என்றே நடைபெற, இந்த அமைப்பின்படி உள் நிலைக் கோள்களின் நிலைப்பாட்டிற்கு இரண்டாவது காரணமாக அமைவது அக்கோள்களின் வெளிவட்ட சுழற்சியே. இந்த வெளிவட்ட சுற்றுச் சுழற்சி நிலையினால்தான், உள் வட்ட சுற்றுச் சுழற்சியின்போது ஏற்படுகின்ற தூரத்தின் குறைவு என்பது, வெளிவட்ட சுற்றுச் சுழற்சியின் காரணத்தால் சமன் செய்யப்படுகிறது என்பதைக் கவனத்திற்கொள்க.

இந்த இழுபறி நிலைப்பாட்டின் காரணமாகவே குறைந்த அளவு ஈர்ப்பு விசை கொண்ட புதன், சுக்கிரன் கோள்கள் சூரியனுக்கு அருகாமையிலிருந்தும் நிலைத்து நிற்க காரணம் ஆகிறது. இந்த வரையறை தவறு என்று முடிவாக வாய்ப்பில்லை. ஏனென்றால், பூமியைவிட அதிக ஈர்ப்பு ஆற்றல் கொண்டிருந்தால் அவை பூமிக்கு வெளிப்புறமே நின்றிருக்க வேண்டும். எடுத்துக்காட்டு:- வியாழன் கோள்.

மேலும், உள்நிலைக் கோள்களின் நிலைப்பாட்டிற்கு அவைகளின் இழுபறி நிலையே காரணம் என்பதை உறுதி செய்யும் நிலையினதாக அமைந்திருப்பது செவ்வாய்க் கோளாகும். இது நிறையிலும் ஈர்ப்பிலும் பூமியைவிடக் குறைவானது என்பதால், செவ்வாய்க் கோளானது இயற்கையின் நியதிப்படி சுக்கிரனுக்கும் பூமிக்கும் இடையே நின்றிருக்க வேண்டும் என்பதைக் கொண்டு அறிந்திட முடிகிறதல்லவா.

இப்படிப்பட்ட இந்த இழுபறி நிலைப் போராட்டம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் நடைபெறுவதால், உள்நிலைக் கோள்கள் அனைத்தும் அவைகளின் இருப்பிட எல்லையைத் தாண்ட முடியாத நிலையாகிறது.

வியாழன் கோள்

வியாழன் கோள், செவ்வாய் இருப்பிட எல்லையிலிருந்து அதிக அளவு தூரத்தில் இருப்பதற்கு அக்கோளின் அதிகப்படியான ஈர்ப்பு ஆற்றலே காரணம் ஆகிறது.

சனிக்கோள்

பொருளின் நிறையிலும் ஈர்ப்பிலும் வியாழன் கோளைவிட சனிக்கோள் குறைவாக இருந்திடும் நிலையினைக் கவனித்திடும்போது, ஈர்ப்புக்கு ஈர்ப்பே எதிர்ப்பு என்ற புதிய வரையறையின்படி, சனிக் கோளானது வியாழன் கோளிற்கு முன்புறமாகவே நின்றிருக்க வேண்டும். ஆனாலும், சனிக்கோளானது வியாழனுக்கு வெளிப்புறமாக நின்றிருப்பதற்கு, அது சூரியனிலிருந்து அதிக அளவு தொலைவில் நின்றிடும் அதன் அதிக அளவிலான தூரமே காரணமாகிறது.

அதாவது, குறிப்பாக அந்த எல்லையில் சூரியனிலிருந்து அதிக அளவிலான தூரத்தின் காரணமாக, சூரியனின் ஈர்ப்பு ஆற்றல் குறைவதும் சிறப்புக் காரணமாகிறது. பிற கோள்களான யுரோனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியன நிறையிலும், ஈர்ப்பிலும் மிகக் குறைந்த அளவினதாக இருப்பதால், சூரியனிலிருந்து அதிக அளவு தொலைவினில் அவை இருப்பதால், அந்நிலையில் சூரியனின் ஈர்ப்பு ஆற்றல் குறைவதும் ஒரு காரணமாகி ஈர்ப்புக்கு ஈர்ப்பே எதிர்ப்பு – என்ற புதிய வரையறையின்படி, அவையவை, அங்கங்கே, அதிக தொலைவில் நின்று சுழன்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *