Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஈரோடு நெருப்பு!

அன்றைய தமிழ்நாடு
அளவிலா குப்பைமேடு!
சாதி
தீண்டாமை
பெண்ணடிமை
மூடநம்பிக்கை
பிராமணீயம்
இப்படி ஏராள குப்பைகள்!
மக்கா குப்பைகள்
நெருப்பே தீர்வு
ஈரோட்டில் எழுந்தது
திராவிட நெருப்பு!

வார்த்தைகளும்
தீக்கக்குவதை
வையம் உணர்ந்தது!

திராவிடச் சித்தரின்
தீராத உழைப்பு
ஆயிரமாண்டு நோய்களுக்கு
அருமருந்து தந்தது.

குப்பைகள்
நெற்றிக் காசுகளைத்
திலகமிட்டுக் கொண்டன.

இந்து சனாதனம்
ஈரப்போர்வை
போர்த்திக் கொண்டது.
குப்பைகள் குவிப்பது
நாள்தோறும் நடப்பதால்,
பெரியாரின் நெருப்பைப்
பிடிப்பது நம் கடன்!
இது விந்தை நெருப்பு!
மூடத்தை எரிக்கையில்
பகுத்தறிவு சுடர்விடும்!
– கவிஞர் வெற்றிச்செல்வன்