Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பொன்னேட்டைப் புதுப்பிக்கும் அய்யா வாழ்க!

 

 

 


-கவிஞர் கருணாநிதி

பூண்டோடு மாண்டிருந்த திராவிடத்தில்

                பொன்னேட்டைப் பதிப்பதற்கு எழுச்சியோடு

கூண்டுடைந்த நீண்டதொரு புரட்சிக்காக

                குரல் கொடுத்துக் கொதித்தெழுந்து சிலிர்த்தச் சிங்கம்

ஆண்டவனை வேண்டுதற்கே பேதம்வைத்த

                ஆரியத்தின் நாறிவிட்ட மூடச் சேற்றை

தோண்டியொரு பாதாளக் குழியில் போட்டு

                தூ என்று துப்பியவன் எங்கள் தந்தை!

 

சார்பெழுத்து போல்வந்து சார்வோரெல்லாம்

                சங்கமித்து வாழ்வதற்கு வரவு சொன்னால்

வேர் பறித்துப் பார்ப்பதற்கு வினை விதைத்தால்

                வீரமணி அய்யாவா பொறுத்திருப்பார்!

ஆர்ப்பரித்து ஈரோட்டில் பெரியார் பிள்ளை

                அகிலத்தை வியக்க வைத்து முழங்கி நின்றார்!

போர்ப் பரணி செய்கின்ற அய்யா வாழ்க!

                பொன்னாட்டைப் புதுப்பிக்கும் அய்யா வாழ்க! ஸீ