அம்மையாரின் அரும்மொழிகள்

மார்ச் 01-15

  • பெண்களே! அடுப்பூதும் அணங்குகளாக அடைபட்டுக் கிடக்கும் பெண்டிராகவே காலங்கழிக்கக் கூடாது.
  • தந்தை பெரியார் தமிழர்களின் பொதுச்சொத்து. கூட்டங்களுக்குப் பேசக் கூப்பிட்டால் வந்து விடுவார். சாப்பாடு கொடுத்தால் சாப்பிட்டு விடுவார். இந்த இரண்டிலும் அவர் குழந்தையே!
  • வீட்டிற்குள் சிறைப் பறவையாய்  இருந்த பெண்களை, வெளி உலகிற்கு சுதந்திரப் பறவைகளாய்க் கொண்டு வந்தவர்தான் தந்தை பெரியார். 
  • அர்ச்சகர் ஆவதற்கு அறிவு தேவையில்லை; பிறவிதான் தகுதி. பார்ப்பனத்தி  வயிற்றில் பிறந்தவன் எவனாயிருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம் என்கிறது பார்ப்பன ஆதிக்கம்.
  • மேல் ஜாதிக்காரர்களான  பார்ப்பனர்களில் தொழிலாளர்கள் எவரும் இல்லை. ஆனால், நம் நாட்டு விசித்திரங்களில் ஒன்று _ தொழிலாளர் தலைவர்களாகப் பார்ப்பனர்களே பெரிதும் இருந்து வருவது.
  • திராவிடர் கழகம் பலாத்காரத்திலோ, இரகசிய அறைகளிலோ, பொதுச் சொத்தை _ பொது ஒழுக்கத்தை நாசம் செய்யும் கிளர்ச்சி முறைகளிலோ சிறிதும் நம்பிக்கையற்ற மாபெரும் மக்கள் இயக்கம்.
  • போலி தேச பக்தி, ஒருமைப்பாட்டு ஜம்பம் நம் இளைஞர்களை வயிற்றுச்சோற்றுக்குத் திண்டாடு-பவர்-களாக்கி  பிறகு வன்முறையாளர்-களாகவும், காலிகளாகவும் ஆக்கிவிடக்கூடாது. –
  • பிரச்சாரத்திற்காகப் போகிற இடத்திலெல்லாம் மாணவர்கள் அடக்கமாக நடந்துகொள்ள வேண்டும். போகிற இடங்களிலெல்லாம் சவுகரியங்களை எதிர்பார்க்காமல், ஏற்படக்கூடிய அசவுகரியங்களை லட்சியம் பண்ணாமல் பணியாற்ற வேண்டும்.       
  • நாம் அணியும் கருஞ்சட்டை _ நம்மைப் பார்த்தவுடன் இவர்கள் சமுதாயத் தொண்டு செய்பவர்கள், மூடநம்பிக்கையை ஒழிப்பவர்கள் ஜாதியை ஒழிப்பவர்கள் என்பதை அடையாளப்-படுத்துவதோடு, பெரியாரின் தொண்டர்கள் என்று பாராட்டுவதாக இருக்கட்டும்!
  • பெண்கள் மூட நம்பிக்கை மீதுள்ள பற்றுதலை முதலில் விட்டொழிக்க வேண்டும். தாங்கள் பெற்று  வளர்க்கும் பிள்ளைகளையும் மூட நம்பிக்கையற்றவர்களாக வளர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *